உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிட்காயின் முறைகேடு வழக்கு இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

பிட்காயின் முறைகேடு வழக்கு இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிட்காயின் முறைகேடு வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரிக்கின்றனர். ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, பிட்காயின்களை சி.சி.பி., போலீசார் சேதப்படுத்தி இருந்தனர். ஆதாரங்களை அழிக்க முயன்றதாக எஸ்.ஐ.டி., அளித்த புகாரில், சி.சி.பி., இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு மீது வழக்குப்பதிவாகி இருந்தது.கடந்த 25ம் தேதி பிரசாந்த் பாபு, சைபர் நிபுணர் சந்தோஷ் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஆறு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவல் முடிந்த நிலையில், பெங்களூரு 1வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் இரண்டு பேரையும், போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்காததால், இரண்டு பேரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை