உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,- எம்.எல்.சி.,

பா.ஜ.,- எம்.எல்.சி.,

துமகூரு:

பா.ஜ., - எம்.எல்.சி., பள்ளியில் மாணவர்கள் வாந்தி

துமகூரு மாவட்டம், சிரா நகரில், பா.ஜ., - எம்.எல்.சி., சித்தன்னா கவுடாவுக்கு சொந்தமான பிரசிடென்சி பள்ளி உள்ளது. இப்பள்ளி விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டனர்.சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் சிலர், வயிற்றுபோக்கு, வாந்தி எடுத்தனர். உடனடியாக விடுதி பொறுப்பாளர், அவர்களை துமகூரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து, உணவை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு, எம்.எல்.சி., சித்தன்னா கவுடா ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !