உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேட்புமனு தாக்கல் செய்ய ஓடி வந்த பா.ஜ., வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் செய்ய ஓடி வந்த பா.ஜ., வேட்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி ;உத்தர பிரதேசத்தில், வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிய 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் சஷாங்க் மணி திரிபாதி, 54, ஓட்டமாக ஓடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். உத்தர பிரதேசத்தின் தியோரியா லோக்சபா தொகுதிக்கு கடைசி கட்டமான ஜூன் 1ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியுடன் நிறைவடைந்தது. பா.ஜ., சார்பில், சஷாங்க் மணி திரிபாதி முதல்முறையாக போட்டியிடுகிறார். மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான இவர், ஐ.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடைசி நாளன்று வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விரைந்து வந்த சஷாங்க், 100 மீட்டர் துாரத்துக்கு ஓட்டமும் நடையுமாக வேர்க்க விறுவிறுக்க வந்து கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன், உ.பி., மாநில பா.ஜ., தலைவர் பூபேந்தர் சிங்கும் ஓடி வந்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.V. Iyer
மே 11, 2024 04:16

பாஜக வேட்பாளர் வெற்றிபெற வாழ்த்துக்கள்


Dwarakanath Putti
மே 10, 2024 22:35

காமராஜ் அய்யா போல ஒரு நேர்மையான தலைவனை பார்க்க முடியாது


N Sasikumar Yadhav
மே 11, 2024 00:00

வாழும் காமராஜர் அய்யா ஷ்டாளினார் இருக்கிறார்


தாமரை மலர்கிறது
மே 10, 2024 20:35

பிஜேபி வேட்பாளர் நாளை மறுநாள் கூட விண்ணப்பிக்கமுடியும் இருந்தாலும் நேர்மையாக ஓடிவந்து குறிப்பிட்ட நேரத்திற்குள்ஓடிவந்து விண்ணப்பித்துள்ளது அவரின் நேர்மையை காட்டுகிறது


மேலும் செய்திகள்





புதிய வீடியோ