உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தினருக்கு ஆதரவாக பேசுவதா? சமூக ஆர்வலர் சையதாவுக்கு பா.ஜ., கண்டனம்

வங்கதேசத்தினருக்கு ஆதரவாக பேசுவதா? சமூக ஆர்வலர் சையதாவுக்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வங்கதேசத்தினரும் மனிதர்கள் தான்; அவர்கள் இந்தியாவில் வாழும் உரிமையை யாரும் தடுக்க முடியாது' என, பேசிய சமூக ஆர்வலரும், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவருமான சையதா ஹமீதுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை, மாநில அரசு மேற் கொண்டுள்ளது. எதிர்ப்பு பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் உத்தரவுபடி, இந்த வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள ஸ்ரீபூமி பகுதியில் இருந்து 10 பேர், இம்மாத துவக்கத்தில் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனர். அதேசமயம், அரசு மற்றும் வனத் துறைக்கு சொந்தமான நிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து வெளியேற்றும் பணியும் அசாமில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலரான சையதா ஹமீத் எதிர்ப்பு தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த சையதா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். அசாமில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சையதா ஹமீத், மாநில அரசின் நடவடிக்கையை சாடினார். அப்போது பேசிய அவர், 'வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன தவறு? அவர்களும் மனிதர்கள் தான். இந்த பூமி மிகப்பெரியது. வங்கதேசத்தினர் இங்கு வாழலாம். 'அவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. தேசியத்தின் அடிப்படையில் மனிதர்களை வெளியேற்றுவது அநீதியானது; மனிதநேயத்துக்கு எதிரானது' என, கூறியிருந்தார். இதற்கு பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில், “வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரான பவுத்தர்கள், கிறிஸ்துவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? இது, நம் நிலம் மற்றும் அடை யாளத்தை பற்றியது. ''இந்த விவகாரத்தில், மனிதநேயத்தின் பெயரால் சையதா தவறாக வழி நடத்துகிறார். அவர், சோனியா, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால், சட்டவிரோத குடியேறிகளை ஆதரிக்கக் கூடாது,” என, தெரிவித்துள்ளார். சையதா ஹமீத் கருத்துக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். போராடுவோம் அவர் வெளியிட்ட அறிக்கை: சோனியா - ராகுல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான சையதா ஹமீத் போன்றோர், அசாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்ற ஜின்னாவின் கனவை நனவாக்க முயற்சிக்கின்றனர். சட்டவிரோத ஊடுருவல்காரர்களை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். இது போன்ற மறைமுக ஆதரவு காரணமாக, அசாமின் அடையாளம் அழிவின் விளிம்பில் உள்ளது. அசாம், வங்கதேசத்தினரின் நிலம் அல்ல; இது எங்களுடையது. எங்கள் மாநிலத்தையும், அதன் அடையாளத்தையும் காப்பாற்ற கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

கண்ணன்
ஆக 26, 2025 14:52

அம்மா, நீங்கள் ஒரு முஸ்லிம்- உங்களுக்கு சௌதி அரேபியாவல் குடியுரிமை கொடுப்பார்களா?


Kulandai kannan
ஆக 26, 2025 12:18

காங்கிரஸ் ஆட்சியில் திட்டக்குழு உறுப்பினராம். காங். ஒரு தேச விரோதக் கூடாரம்.


jss
ஆக 26, 2025 11:00

பங்களா தேஷ உருவானப்பின் பங்களாதேசிகள் அங்கே இருப்பது தானே நியாயம். இத்தகைய requestai அமெரிக்காவுக்கு வைத்து அங்கே அனுப்கலாமே. இல்லை சவுதிக்கும் வைக்கலாமே.எதற்கு இந்திய. இந்தியாவின் ஜனத்துகையுனால் வெடித்துக்கொண்டிருக்கிறது் இன்னும் லட்சக்கணக்கீனோர் திருட்டுத்தனமாக நுழைய வேண்டுமா. அங்கே இருக்கும் இந்துகளுக்கு பாதுகீப்புல்லை இங்கே வரும் பங்களாதேசிகளுக்கு உரிமை வேண்டுமாம். வாயை பொத்திக் கொள்ளுங்கள். உங்கள்ஙசீயம் வெளுக்கிறது


Ramona
ஆக 26, 2025 08:45

ஒரு சுதந்திர நாட்டுக்கு தனி சட்டம் கடுமையானதாக இல்லாத வரை இந்த மாதிரி ,பொறை பிஸ்கட் தின்னும் ஜன்மங்கள் இருக்க தான் ,குறைக்கக் தான் செய்யும்.


HoneyBee
ஆக 26, 2025 08:09

நாங்கள் உங்க வீட்டுல வந்து ஐந்து மாதங்கள் தங்கினா நீ எனக்கு எல்லா சௌக்கியங்களும் பண்ணுவியா. அப்ப நீ பண்ண மாட்ட ஆனா நாங்க மட்டும் செய்யுனுமா


V RAMASWAMY
ஆக 26, 2025 08:07

பங்களா தேஷாவாசிகளான ஹிந்துக்கள் தாக்கப்படும்பொழுது இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை? ஒரு கண்ணில் வெண்ணை இன்னொன்றில் சுண்ணாம்பா?


GMM
ஆக 26, 2025 07:33

வங்கதேசத்தினரும் மனிதர்கள் தான் கள்ள தனமாக குடியேற கூடாது. அவர்கள் இந்தியாவில் வாழும் உரிமை உண்டு என்றால், வங்கதேச நாடு எதற்கு? அபகரிக்க பட்ட இந்திய பகுதி தானே. அதனையும் இந்தியாவுடன் சையதா காங்கிரஸ் உதவியுடன் இணைந்து விட உதவ வேண்டும். ஒருவருக்கு ஒருத்தி. ஒருவருக்கு ஒரு நாடு. ஒருவருக்கு ஒரு ஓட்டு. சுதந்திர தின நூறாவது ஆண்டில் அபகரிக்கப்பட்ட இந்திய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். சமூக அமைதியின்மை ஆர்வலர்?


R SRINIVASAN
ஆக 26, 2025 07:01

சோனியாவும், நேருவின் குடும்பமும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை இந்த அம்மையாரின் வாக்கு மூலம் நிரூபிக்கிறது. பிரதமராக, எதிர் கட்சி தலைவராக அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத ராகுல் காந்தி தான் வரவேண்டுமா? வெளிநாட்டவராயிருந்தாலும் இந்தியாவின் கலாச்சாரத்த்தை எதிர்க்கொள்பவர்களுக்கே குடியுரிமை வழங்கவேண்டும். இந்திரா அம்மையார் அதிக அளவில் வாக்கு பெறுவதற்க்காக வங்க தேசத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களை வாக்குரிமை கொடுத்து அதனால் அஸ்ஸாமில் prafulla குமார் மஹாந்த என்பவர் தலைமையில் அசாம் கண பரிஷத் என்ற கட்சி உருவாகி கலவரம் நடக்க வில்லையா? காமராஜர் செய்த தவறு லால்பகதூர் சாஸ்திரிக்கு பிறகு மொரார்ஜி தேசாயை பிரதமராக தேர்ந்தெடுக்காமல் இன்ற அம்மையாரை தேர்ந்தெடுத்ததன் பலனை இந்தியா மக்கள் அனுபவிக்கின்றனர்.


SUBBU,MADURAI
ஆக 26, 2025 03:56

Thats Syeda Hameed. Her expertise is in Urdu Womens poetry. So Sonia Gandhi appointed her to planning commission from 2004 to 2014 to plan eradication of Sanatan. Her father was education secretary under the Muslim education ministers of India in the 50s. So family has been working on it for decades. Now she wants Bangladeshis settled in Assam and all over India. Because poisoning our minds was not enough, our very land and families must be poisoned too.


Kasimani Baskaran
ஆக 26, 2025 03:55

கள்ளக்குடியேறிகளை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியை தடை செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை