உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காமன்வெல்த் ஊழல் விசாரணை :பா.ஜ., கோரிக்கை

காமன்வெல்த் ஊழல் விசாரணை :பா.ஜ., கோரிக்கை

புதுடில்லி காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. நிதி முறைகேடு மட்டுமின்றி பல்வேறு ஒழுக்க முறைகேடுகளும் காமன்வெல்த் போட்டிகளின் போது நடைபெற்றுள்ளதாகவும் பா.ஜ., குற்றம் சாட்டி உள்ளது. இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிபிஐ ியக்குநர் ஏ.பி.சிங்., பிரதமர் மன்மோகன் சிங், தணிக்கை குழு முன்னாள் தலைவர் வி.கே.சுங்லு ஆகியோரிடம் பா.ஜ., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், காமன்வெல்த் போட்டி கழக தலைவர் சுரேஷ் கல்மாடி, கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை