உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் பா.ஜ., செய்துள்ளது: நிதின் கட்கரி

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் பா.ஜ., செய்துள்ளது: நிதின் கட்கரி

புதுடில்லி: 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி செய்யாத செயலை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ, செய்து சாதித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு டில்லி லோக்சாபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் கமலிஜித் ஷெராவத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் கூறியது, நாட்டில் பணப் பற்றாக்குறை இல்லை. நேர்மையான தலைவர்கள் உள்ளனர். திறமையான தலைமையின் கீழ் மட்டுமே நாடு முன்னேறும். கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியை தலைமையிலான பா.ஜ.. அரசு செய்துள்ளது.உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதை பார்க்க வேண்டுமெனில் வரப்போகும் தேர்தலில் பா.ஜ.வை வெற்றி பெற செய்யுங்கள், காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றில் இருந்து டில்லியை மீட்க பா.ஜ.,வை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தஞ்சை மன்னர்
மே 22, 2024 10:59

ஆமாம் வருஷம் கட்டி காத்த பொதுத்துறை சொத்துக்களை வித்து தின்னாட்சி இந்த பத்து வருசத்துல விமான நிலையத்தை குத்தகைக்கு விட்டாச்சு அரசுக்கு சொந்தமான பங்குகளை வித்தாச்சு


ramesh
மே 22, 2024 10:36

உண்மை தான் காங்கிரஸ் அறுபது ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும் அரசு பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க வில்லை ஆனால் உங்கள் பிஜேபி ஆட்சிக்கு வந்த பத்து ஆண்டுகளில் அனைத்து அரசு பொது துறை நிறுவனங்களையும் அதானிக்கு விற்று சாதனை புரிந்து உள்ளது இனி குடியிருக்கும் மக்கள் மட்டுமே அதானிக்கு விற்க பாக்கி உள்ளது வெள்ளைக்காரனுக்கு அரசுரிமையை ஆற்காட் நவாப் கொடுத்தது போல


V. Kanagaraj
மே 22, 2024 10:28

ஆமாம் அறுபது ஆண்டுகளில் காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை விற்று கொண்டிருருக்கிறது


ஆரூர் ரங்
மே 22, 2024 11:02

அரசுகள் நிறுவனம்,, ஆலை நடத்தி வணிகம் செய்வது தவறு.அது தேவையில்லை என்று பேட்டியில் கூறியவர் பசி. ICICI, UTI போன்ற நிறுவனங்களை தனியாருக்கு அளித்தது காங்.


veeramani
மே 22, 2024 09:44

மதிப்பிற்குரிய கட்காரி அவர்கள் மிக அருமையாக சொல்லுகிறார் வாஜிபாய் பின்னர் இந்தியாவில் அதிக சாலைகள் நிர்மாணித்த பெருமை கட்கரிக்கு மட்டும்தான் இவரை அடுத்த ராஷ்டிரபதியாக நியமனம் செய்யலாம்


A1Suresh
மே 22, 2024 08:56

மாண்புமிகு அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதன்முதலில் தங்கநாற்கர திட்டம் என்று நாட்டின் சென்னை தில்லி மும்பை கொல்கத்தா இவற்றை சாலைகளால் இணைத்தார் மேலும் காஷ்மீர் கன்யாகுமரி மற்றும் குஜராத் வங்காளம் என்றும் சாலைகள் அமைத்தார் தாய் ஓரடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள் அவ்வாறே தாங்கள் பாரத்மாலா திட்டத்தை செயல்படுத்துகின்றீர்கள்


A1Suresh
மே 22, 2024 08:53

பாரதத்தில் சைவர்களும் வைணவர்களும் நாடெங்கும் திருத்தல தீர்த்த யாத்திரைகள் செய்வர் அதற்காக தாங்கள் அமைத்த சாலைகள் மிகவும் நன்றாக உதவும் எனவே அவர்கள் அனைவருடைய நல்லாசிகள் தங்களை சாரும் ஆழ்வார்கள் பதின்மர் பாடிய நூற்றெட்டு வைணவ திருத்தலங்கள் மற்றும் தேவார பதிகம் பெற்ற முன்னூற்றுக்கும் அதிகமான திருத்தலங்களுக்கு செல்லும் அடியார்களின் பூரணமான நல்லாசி தங்களுக்கே உண்டு


A1Suresh
மே 22, 2024 08:50

ஐயா உலகிலேயே சிறந்த சாலைகள் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் அமைந்த சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகும் அங்கே மலைகளை சராசரியாக பத்துகிமீட்டர் தூரத்திற்கு குடைந்து குடைந்து போக்குவரத்து சாலைகள் அமைத்தனர் அதை முன்னுதாரணமாக வைத்து அவ்வாறே பாரதத்தின் இமயமலை விரிந்த காஷ்மீர், உபி, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மலைகளைக் குடைந்து சாலைகள் அமைத்தீர்கள் நன்றி ஐயா


A1Suresh
மே 22, 2024 08:46

ஐயா உங்களுக்கு நிஜமான போட்டியாளர் அஸ்வினி வைஷ்ணவ் ஜி மட்டுமே நீங்கள் சாலைகளில் சாலைகள் அமைப்பதில் புரட்சி செய்கிறீர்கள் அவர் ரயில்வே புரட்சி செய்கிறார் அதுவும் மக்கள் போக்குவரத்து ரயில்வே தனி பிரத்யேக சரக்கு போக்குவரத்து தனி என்று இரண்டாக பிரித்து இரண்டனுக்கும் தனித்தனியே புதிய இருப்புப்பாதைகள் அமைக்கிறார்


A1Suresh
மே 22, 2024 08:43

இன்னும் இருபது ஆண்டுகள் எங்கள் பாஜகவின் நிரந்தர ஊழலற்ற ஆட்சி நடைபெற்றால் சிங்கப்பூர் பாரதத்திடம் பிச்சை எடுக்கும்


A1Suresh
மே 22, 2024 08:42

ஒருநாளைக்கு கிமீட்டர் தூரத்திற்கு ஆறுவழிச்சாலை அல்லது எட்டுவழிச்சாலை ஐயா நீங்கள் செய்வது உலக சாதனை தான் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஜி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை