உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வினரே ஊழலின் ராஜா: கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்

பா.ஜ.,வினரே ஊழலின் ராஜா: கர்நாடக துணை முதல்வர் விமர்சனம்

பெங்களூரு: ''எங்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் எந்த தவறோ, மோசடியோ நடக்கவில்லை. ஒவ்வொரு ஊழலும், முறைகேடுகளும் பா.ஜ., ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஊழலின் ராஜா அவர்கள்தான்'' என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.மைசூரு நகர்புற வளர்ச்சி ஆணையத்திற்கு (முடா) சொந்தமான வீட்டுமனை நிலத்தை முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முடா ஊழல் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று (ஜூலை 26) கர்நாடக பா.ஜ., எம்.பி.,க்களும் பார்லி., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடா ஊழலில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: பா.ஜ.,வின் பாதயாத்திரை மற்றும் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளில் நான் தலையிட விரும்பவில்லை. அது முதல்வரின் மனைவிக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட சொத்து. இந்த விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது முடாவால் கையகப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. எனவே, இழப்பீடு வழங்க கர்நாடக அரசும், முடாவும் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவும், முதல்வர் மற்றும் மாநில அரசை சீர்குலைக்கவும் பா.ஜ., முயற்சிக்கிறது. எங்கள் ஆட்சியில் எந்த தவறோ, மோசடியோ நடக்கவில்லை. ஒவ்வொரு ஊழலும், முறைகேடுகளும் பா.ஜ., ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஊழலின் ராஜா அவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

s sambath kumar
ஜூலை 27, 2024 11:48

அதை யோக்கியன் சொல்லட்டும்,


நிக்கோல்தாம்சன்
ஜூலை 26, 2024 19:03

இதை சொல்வது , ரியல் எஸ்டேட் மன்னன் அல்லவே


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 16:56

அப்போ நீ உன் பார்ட்டி எல்லாம் கூஜாவா


Barakat Ali
ஜூலை 26, 2024 16:11

அண்ணாச்சி பாஜகவுக்கு கட்டிங் கொடுத்த தைரியத்துல பேசுறாப்டி .... அதே காரணத்தால பாஜகவும் இவரை தொட்டும் பார்க்காது .... தடவியும் பார்க்காது .....


Anbuselvan
ஜூலை 26, 2024 16:00

இதை சொல்பவர் கண்ணாடி முன் தன்னை பார்த்து சொல்லிய பிறகு மற்றவர் மேல் பழி போட வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஜூலை 26, 2024 14:56

ஜாமீன் தலைவரை வச்சுகிட்டு இப்படி பேச வெக்கமாயில்ல.


A Viswanathan
ஜூலை 26, 2024 14:20

தாமாஷ் செய்கிறீர்கள். உங்கள் கட்சியை விடவா.


amuthan
ஜூலை 26, 2024 14:02

முற்றிலும் உண்மை.


Duruvesan
ஜூலை 26, 2024 16:55

கரக்ட் ஆட்சி உங்களுது, போலீஸ் உங்களுது, ஏன் ஒரு கேஸ் கூட இல்லை,


Ramesh Sargam
ஜூலை 26, 2024 14:02

யார் ராஜா என்று காங்கிரஸ் மகாராஜா மட்டும்தான் கூறமுடியும். சொல்லப்போனால் காங்கிரஸ் ஊழலின் சக்கரவர்த்தி, சர்வாதிகாரி.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 14:01

அன்பளிப்பு என்பது லஞ்சத்துக்கு வைத்த கவுரவப் பெயர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை