உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடந்த காலத்தை பற்றி மட்டும் பேசும் பாஜ தலைவர்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு

கடந்த காலத்தை பற்றி மட்டும் பேசும் பாஜ தலைவர்கள்: பிரியங்கா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெகுசராய்: '' பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பாஜ மூத்த தலைவர்கள் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பேசுகின்றனர். நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தை பற்றி பேசவில்லை,'' காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவ.,6 மற்றும் 11ல் தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பேசியதாவது: உங்களின் இந்த நிலம் மிக அழகானது. புனிதமானது. இங்கிருந்து தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மஹாத்மா காந்தி போராட்டத்தை துவக்கினார். சிறந்த அதிகாரிகள், தலைவர்கள், அரசியல்வாதிகள், கவிஞர்களை இப்பகுதி கொடுத்துள்ளது. ஆனால், இப்பகுதி இன்னும் முறையாக வளர்ச்சி காணவில்லை. அரசியலமைப்புக்காக மஹாத்மா காந்தி போராட்டத்தை துவக்கினார். அது தான் நமக்கு சுதந்திரம், வளர்ச்சி,உரிமை, ஓட்டுரிமை என்ற மிகப்பெரிய உரிமையை கொடுத்தது. அது தான் உங்களை இந்த நாட்டின் குடிமகனாக மாற்றியது.பாஜ மக்களை பலவீனப்படுத்தி வருகிறது. உங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்கள் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டதால் தான், கேரளா முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்களில் பீஹார் மக்கள் வேலைபார்ப்பதை பார்க்க முடிகிறது.பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர்கள் உட்பட பாஜ மூத்த தலைவர்கள் முன்னாள் பிரதமர் நேரு பற்றி பேசுகின்றனர். ஆனால், அவர்கள் எதிர்காலம் பற்றி பேசுகின்றனரா? 'நேரு இதனை அழித்துவிட்டார்'. 'இந்திரா அதனை அழித்துவிட்டார்' என்கின்றனர். ஆனால், நிகழ்காலத்தை பற்றி பேசுகின்றனரா? பணவீக்கத்தால் நீங்கள் எப்படி பாதிக்கின்றீர்கள் என பேசுகின்றனரா? இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

vadivelu
நவ 02, 2025 06:58

மறக்க முடியாத கொடிய ஊழல்கள் கடந்த காலத்தில்தான் நடந்தன, என்ன எய்ய நம்ம குடும்பமும் அதில் ஈடுபட்ட்டதால் சொல்ல வேண்டி இருக்கு.


நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 06:25

எந்த தகுதியும் இல்லாத நீங்க, ராகுல் , உதயநிதி , பிரியன்க் கார்கே, விஜயேந்திரா போன்றவர்கள் இருப்பதே கடந்தகாலத்தின் தவறுதான்


RAAJ68
நவ 01, 2025 23:17

நேற்று உங்கள் பாட்டியின் இறந்த தினம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அஞ்சலி செலுத்தியதாக செய்தியே இல்லை இந்திரா காந்தியை மறந்து விட்டனர்


V.Mohan
நவ 01, 2025 22:10

விளம்பர திராவிட மாடல் சம்பள அடிவருடிகளை மிஞ்சி விட்டனர் அமைதி மார்க்கத்து பெயரில் வெறுப்பு கருத்து எழுதும் நபர்கள். குறை சொல்ல இயலாமல் மோடி அவர்கள் மீது அடிவயிற்று வெறுப்பை கக்குவது ஏன் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த காலத்தில் இந்திரா பெரோஸ்கான் குடும்பத்தினர் பண்ணிய தவறுகளாலும், ஊழல்களாலும் இந்தியா கிட்டத்தட்ட நாசமாகும் நிலைக்கு போனது சரித்திர உண்மை. சும்மா சும்மா பிரதமர் இது சொன்னார் அது சொன்னார்னு கிளப்பி விட்டு என்னதான் இவர்கள் ஜல்லி அடித்தாலும் தாய்நாட்டை கேவலப்படுத்தும் ராகுல் குடும்பம் நல்லவர்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது.


M S RAGHUNATHAN
நவ 01, 2025 21:31

எதற்கெடுத்தாலும் உன் அண்ணன் எங்கள் தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் , என் பாட்டியும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்தனர் என்று வாய் கூசாமல் பொய் சொல்வது உங்களுக்கு தெரியாதா ?


M S RAGHUNATHAN
நவ 01, 2025 21:29

1980இல் இந்திய பிரஜையாக இல்லாத சோனியா அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டது எப்படி என்று இந்த பெண்மணி சொல்லுவாரா. 1968 இல் திருமணம் செய்து கொண்ட சோனியா ஏன் 15 வருடங்கள் கழித்து குடியுரிமை விண்ணப்பித்து பெற்றார். 1984. இல் இந்திரா கொலை செய்யப்பட்டார்.


M S RAGHUNATHAN
நவ 01, 2025 21:25

தங்கள் பதிவு தவறு. நேருவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்க வில்லை.


krishnamurthy
நவ 01, 2025 21:17

காங்கிரஸின் தவறுகள் இன்னமும் முழுதாக வெளியில் வரவில்லை. தோதறிந்து பேசவேண்டும்


Keshavan.J
நவ 01, 2025 21:15

இந்தியாவின் முதல் வோட்டை திருடியவர் காந்தி பிரதமர் தேர்தலில் வல்லபாய் படேலுக்கு 12 ஓட்டும் நேருவுக்கு 1 ஓட்டும் கிடைத்தது . வொட் சொர் காந்தி நேரு பேரை அறிவித்து விட்டார். அன்றிலிருந்து தொடங்கியது இந்தியாவுக்கு சனி


aaruthirumalai
நவ 01, 2025 21:02

கட்சியை அடிப்படையில் இருந்து மறுசீரமைப்பு செய்ய வேண்டிய முக்கியமான கால கட்டத்துல கட்சி இருக்கிறது என்பதை நீங்க நினைவு கொள்ள வேண்டும்.


சமீபத்திய செய்தி