உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்த தானம் செய்ததாக பா.ஜ., மேயர் பித்தலாட்டம் : எல்லாமே நடிப்பா கோபால் ? கலாய்த்த நெட்டிசன்கள்

ரத்த தானம் செய்ததாக பா.ஜ., மேயர் பித்தலாட்டம் : எல்லாமே நடிப்பா கோபால் ? கலாய்த்த நெட்டிசன்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முர்தாபாத்: உ.பி.யில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நடந்த ரத்ததான முகாமில் பங்கேற்ற பா.ஜ., மேயர், ஒருவர் தானும் ரத்தம் கொடுத்ததாக நாடகமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பிரமதர் மோடியின் 74 வது பிறந்த நாளை நாடு முழுதும் பா.ஜ.,வினர் கொண்டாடினர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் மோடி பிறந்த நாளையொட்டி உபி. மாநிலம் முர்தாபாத் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணியினர் சார்பில் ரத்ததான முகாம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமை துவக்கி வைக்க முர்தாபாத் மாநகராட்சி மேயர் வினோத் அகர்வால் வந்தார்.அப்போது தானும் ரத்ததானம் வழங்கியதாக செய்தி வெளியிடுவதற்காக மேயர் வினோத் அகர்வாலை படுக்கையில் படுக்க வைத்து மேயர் சிரித்த முகமத்துடன் ரத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் எடுக்க வைத்தனர்.உண்மையில் மேயர் ரத்தம் வழங்காமல் நாடகமாடியது தெரியவந்தது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.இது குறித்து நடந்த விசாரணையில் ரத்தம் வழங்குவதற்கு முன் மேயரை பரிசோதித்ததில் அவர் சர்க்கரை நோயாளி என்பதால் ரத்தம் எடுக்காமல் ரத்தம் கொடுத்தது போன்று புகைப்படம் எடுக்க வைத்ததும் தெரியவந்தது.எனினும் சர்க்கரை நோயாளி என்றால் ரத்தம் கொடுக்காமல் ரத்ததானமுகாமை துவக்கி வைத்து விட்டு போக வேண்டியது தானே.. ஏன் ரத்தம் வழங்கியதாக நாடகம் ஆட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி விமர்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nandakumar Naidu.
செப் 21, 2024 01:38

இது போன்ற சில கிருக்கன்களால் பிஜேபி யின் பெயர் கெடுகிறது. குள்ளநரி கூட்டம் இதை பிடிதுக்கொள்கிறது.


Anantharaman Srinivasan
செப் 20, 2024 22:58

ஒரு நடிகைக்கு முத்தம் கொடுக்க சொல்லியிருந்தால் நடித்திருக்க மாட்டார்...


RAJ
செப் 20, 2024 22:57

ஏன் இப்படி.. கேவலப்படுத்தறீங்க...


venugopal s
செப் 20, 2024 22:26

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!


Sathyanarayanan Sathyasekaren
செப் 20, 2024 22:40

கொத்தடிமை வேணுகோபால் அப்போ நீயும் டோப்பா தலையான்? ஊழல் செஞ்சு kollaiadichu ஊரை ஏமாற்றி பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறாயா?


Velan Iyengaar
செப் 20, 2024 21:57

ENTIRE POLITICAL SCIENCE படிப்பு பித்தலாட்ட வகையா இல்லையா என்று கற்றறிந்தவர்கள் சொல்லவேண்டும் ......


சமூக நல விரும்பி
செப் 20, 2024 21:53

இந்த மேயர் இரத்தம் கொடுக்காம கொடுத்த மாதிரி போஸ் கொடுக்கிறார். நம்ம மாடல் அரசு நிர்வாகிகள் நிதி எதுவும் கொடுக்காமலே கொடுத்த மாதிரி கணக்கு எழுதறான்.


T.sthivinayagam
செப் 20, 2024 21:36

மங்காத்தா ஆட்டம் பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்ல என்று ஆன்மிக அரசியல் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்


Azar Mufeen
செப் 20, 2024 21:31

பிஜேபி மாடல், டி. எம். கே மாடல் எல்லாமே பிராடுதானுங்க


தாமரை மலர்கிறது
செப் 20, 2024 21:10

மேயர் ரத்தம் கொடுத்துள்ளார் என்ற செய்தி மற்ற மக்களை ஊக்குவித்து, ரத்தம் கொடுக்க செய்யும். சக்கரை நோயுள்ள அவரால், விருப்பட்டாலும் கொடுக்க இயலாது. மேயரின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்ளாமல், இதை பெரிதாக்கி, அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் விரும்புகிறார்கள்.


முருகன்
செப் 20, 2024 21:08

பழசு ஆக ஆக சாயம் வெளுக்க தான் செய்யும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை