உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்களை பரப்பும் பா.ஜ., --- எம்.பி.,க்கள்

பொய்களை பரப்பும் பா.ஜ., --- எம்.பி.,க்கள்

பெங்களூரு: பா.ஜ., -- எம்.பி.,க்கள் பொய்களை பரப்புவதாக, அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பொய்களை பேசி மக்களிடம் தவறான தகவலை பரப்புவதற்காக பா.ஜ.,வில் சிலர் உள்ளனர். பொய்யான செய்தி பரப்புவது சமூகத்திற்கு அச்சுறுத்தல் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அது பற்றி பா.ஜ.,வுக்கு துளியும் கவலை இல்லை.ஹாவேரியில் வக்பு வாரிய நில பிரச்சனை தொடர்பாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார் என, பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அது பொய் என்று தெரிந்ததும் அந்த பதிவை நீக்கிவிட்டார்.பா.ஜ., -- எம்.பி.,க்கள் பொய்யை பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். குடும்ப அரசியல் பற்றி தேஜஸ்வி சூர்யா பேசுகிறார். ஆனால் அவரே குடும்ப அரசியல் பின்னணி கொண்டவர். எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா அரசியலில் இருப்பது, தேஜஸ்வி சூர்யாவுக்கு ஞாபகம் இல்லையா?கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தனர். பணத்தை மாற்றுவதற்காக எத்தனை பேர், வங்கி வாசல் முன் இறந்து போயினர் என்று மத்திய அரசுக்கு தெரியுமா?வக்பு வாரிய நில பிரச்னையால் விவசாயி தற்கொலை செய்வதாக அரசு மீது, பா.ஜ., பழிபோடுகிறது. ஆனால் அந்த விவசாயி 2022ல் தற்கொலை செய்துள்ளார். அப்போது பா.ஜ., ஆட்சிதான் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ