உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்கா வெற்றியை எதிர்த்து பா.ஜ., நவ்யா ஹரிதாஸ் மனு

பிரியங்கா வெற்றியை எதிர்த்து பா.ஜ., நவ்யா ஹரிதாஸ் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்றார். இந்நிலையில், பிரியங்காவின் வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'தேர்தலுக்கான வேட்புமனுவில் தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை பிரியங்கா மறைத்துள்ளார். உண்மையான விபரங்களை அவர் வழங்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் வெற்றி பெற்றது செல்லாது என்பதால், வயநாடு லோக்சபா இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

panneer selvam
டிச 21, 2024 22:02

Just waste of court time


vijai
டிச 21, 2024 18:26

டெங்கு கொசுவான காங்கிரசை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.நாட்டையே நாசம் பண்ணிட்டு இதுல வேற இத்தாலி கூட்டம் உள்ள பூந்துருச்சு


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 11:28

ஒன்று ரெண்டு பேர் காமெடியா இருந்தால் பரவாயில்லை. பாஜக முழுக்க, தலைவர்கள் முதல் வேட்பாளர் வரை காமெடியா இருக்கிறார்களே


MADHAVAN
டிச 21, 2024 11:04

தோல்விய தாங்கிக்கொள்ள யோக்கியதை இல்லாத


Anand
டிச 21, 2024 10:56

சொத்து பத்து எதையும் மறைக்கவில்லை, அவர்கள் தினமும் பிச்சையெடுத்து தான் வயிற்றை கழுவி வாழ்கிறார்கள்...


Duruvesan
டிச 21, 2024 09:36

காஷ்மீரி ஹிந்து பண்டிட்டுகள் படுகொலை, எமது தமிழ் இன படுகொலை இதெல்லாம் பிரிண்ட் பண்ணி நல்ல பை குடுங்க கனிக்கும் பிரியங்கா வுக்கும், சந்தோசமா வாங்கிப்பாங்க


AMLA ASOKAN
டிச 21, 2024 09:16

நவ்யா ஹரிதாஸ்க்கு வீண் செலவு . நீதிமன்றத்துக்கு நேரம் காலம் வீணடிப்பு . படுதோல்வியால் ஏற்படும் ஆத்திரம் .


Iyer
டிச 21, 2024 08:48

இந்த நாட்டை கெடுத்து குட்டிகிச்சுவர் ஆக்கியது நேருவும் காந்திகளும் தான்


Thangam
டிச 21, 2024 12:08

உங்க


Barakat Ali
டிச 21, 2024 08:05

மத வெறி கட்சி என்று பாஜகவை குறை கூறும் காங்கிரஸ் அதையேதான் செய்கிறது ..... பிரியங்காவும் மத அடிப்படையில் பிரச்சாரம் செய்துதான் வெற்றி பெற்றார் .....


Kasimani Baskaran
டிச 21, 2024 08:05

சொத்துக்களை மறைக்க நேரு குடும்பத்துக்கு தனி உரிமம் காந்தி காலத்திலேயே உண்டு. இப்பொழுதும் அது தொடர்வதுதான் ஆச்சரியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை