முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பா.ஜ., எதிர்ப்பு
பெலகாவி: ''மாநில அரசு மக்கள் நல பணிகள் செய்ய, முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு செய்தது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை. மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.இதை எதிர்த்து சட்டசபை உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம். மாநில அரசு மக்கள் நல பணிகள் செய்ய, முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு செய்தது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது.இவ்வாறு அவர்கூறினார்.