உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா பள்ளி கட்டடங்களின் நிறம் ஆரஞ்சுக்கு மாற்ற பா.ஜ., உத்தரவு; எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

ஒடிசா பள்ளி கட்டடங்களின் நிறம் ஆரஞ்சுக்கு மாற்ற பா.ஜ., உத்தரவு; எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பள்ளி கட்டடங்களின் நிறத்தையும், ஆரஞ்ச் வண்ணத்திற்கு மாற்றும் ஆளும் பா.ஜ., அரசின் உத்தரவுக்கு, எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஒடிசாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் சரண் மஜி முதல்வராக உள்ளார். அந்த மாநிலத்தில், 24 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, கடந்த ஆண்டு முதல் பா.ஜ., ஆட்சியில் அமர்ந்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பள்ளி கட்டடங்களை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற வேண்டும் என, அந்த மாநில அரசு, அனைத்து மாநில கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.அதை எதிர்த்து, பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரசன்ன ஆச்சார்யா நேற்று கூறியதாவது: ஆளும் பா.ஜ.,வின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. பள்ளி கட்டடங்களின் நிறத்தை மாற்றுவதால், பள்ளி மாணவர்களின் நிலைமை மாறிவிடப் போகிறதா; இதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அல்லது பள்ளி மாணவர்களுக்கு புதிய உற்சாகம் பிறந்து விடப் போகிறதா?பள்ளி மாணவ - மாணவியர் மத்தியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான மனப்பான்மையை மறைமுகமாக ஏற்படுத்தும் முயற்சி தான் இது. அரசின் பணம்தான் வீணாகுமே தவிர, மாணவர்களின் மனநிலை மாறப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில கல்வி அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த நித்யானந்த் கோண்ட் கூறும் போது, ''முந்தைய பிஜு ஜனதா தளம் ஆட்சியில், பள்ளிக் கட்டடங்களின் நிறம், அவர்களின் கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களான பச்சை, வெள்ளையாக மாற்றப்பட்டது.''பள்ளி மாணவர்களின் சீருடையும் அந்த நிறத்திற்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதற்காக இப்போது நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வண்ணத்தால் பள்ளிகளும் பார்க்க நன்றாக இருக்கும்,'' என்றார்.

புதிய இல்லத்தில் குடியேறிய முதல்வர்

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி நேற்று முதல், தன் புதிய அரசு இல்லத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார். 25 ஆண்டுகளாக முதல்வர்கள் வசிக்காத அந்த வீடு, புதிய முதல்வரை நேற்று வரவேற்றது. புதிய அரசு வீட்டில் நேற்று கிரஹப்பிரவேசம் நடந்தது. இதற்கு முன், கடந்த 2000ம் ஆண்டு வரை முதல்வர் இல்லமாக இருந்த அந்த கட்டடத்தில் முதல்வர்கள் ஜே.பி.பட்நாயக் மற்றும் கிரிதர் காமாங் வசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

J.Isaac
மார் 07, 2025 15:27

கலரை மாற்றி என்ன பிரயோசனம். கல்வியின் தரம் மாற வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 07, 2025 10:36

அனைத்து லாரிகளுக்கும் மஞ்சள் வண்ணத்தில்தான் பெயிண்ட் அடிக்கவேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்து லாரிக்காரர்கள் எல்லோரும் மஞ்சள் பெயிண்ட் வாங்கிய பின்னர், முன்னர் அறிவித்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது, அனைத்து லாரிகளுக்கும் பச்சை வண்ணத்தில்தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று புது ஆணை பிறப்பித்து அதையும் பதினைந்து நாட்கள் சென்ற பின், மைய ஒன்றிய நடுவண் மத்திய அரசு, லாரிகளுக்கு மஞ்சள் நிறமே ஏற்றது என்று கூறிவிட்டதால் தமிழகத்திலும் லாரிகளுக்கு மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்க அரசு வலியுறுத்துகிறது என்று ஆணை பிறப்பித்த கோல்மால் புர குருமகா சந்நிதானத்தின் பலவண்ண மோசடி எத்தனை பேருக்குத் தெரியும்?


Narayanan Muthu
மார் 07, 2025 10:36

அதென்ன ஆரஞ்சு நிறம். காவின்னு சொல்ல பயமா.


angbu ganesh
மார் 07, 2025 09:57

பச்சையா இருந்தா okeyvaa


Narayanan Muthu
மார் 07, 2025 10:42

தேசிய கொடியிலும் பிஜேபி கொடியிலும் பச்சை நிறமும் இடம் பெற்றுள்ளது. இருந்தால் என்ன தவறு. பச்சை நிற காய்கறிகளை உணவில் தவிர்த்து விடுவாயா


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 07, 2025 09:40

ஆரஞ்சு கலருக்குப் பதில் மஞ்சள் கலர் என்று ஒரிசா அரசு சொல்லி இருந்தால் இந்நேரம் தமிழ் நாட்டில் பாஜக திமுக கூட்டணியே உருவாகி இருக்கும்.


Sampath Kumar
மார் 07, 2025 09:34

எல்லாம் காவி மயம் இனிமேல் நம் உடையும் காவி ஆகலாம் ஆக காதி வஸ்திராலயம் இனி காவி வஸ்திராலயமாக மாறலாம் எல்லாம் இன்பமயம் புவிமலே என்பது போல பூமியும் காவி ஆகும் அடஐயோ ஐயோ


theruvasagan
மார் 07, 2025 22:16

காவியா மாறுவது தப்பில்லை. ஆனால் காலிப் பயல்களாக மட்டும் மாறக்கூடாது நண்பா.


Minimole P C
மார் 07, 2025 08:01

Changing colours, according to the CMs wish is not new to TN. It is three decades old. Green, Yellow, black all were sponcered by the ruled and ruling CMs only.


Minimole P C
மார் 07, 2025 07:56

The class room looks good with matching colours. I like it.


Raj
மார் 07, 2025 07:25

இது பா ஜ க வின் தலைக்கனம் தான், முதல்வருக்கும் பெயிண்ட் கடைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு போல, இனி இப்போ துணி கடைக்காரணும் வந்து ஐயா மாணவ செல்வங்களின் சீருடையும் ஆரஞ்சு ஆக்கி உத்தரவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். அதுவும் நடக்கும் இந்த பா ஜ ஆட்சியில்.


naranam
மார் 07, 2025 06:38

சபாஷ்! பயந்து நடுங்குவானுங்களே!


முருகன்
மார் 07, 2025 09:39

திராவிடத்தை கண்டு பயப்படுவதை விடவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை