உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் உயிருடன் விளையாடும் பா.ஜ.,: ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

கெஜ்ரிவால் உயிருடன் விளையாடும் பா.ஜ.,: ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருடன் பா.ஜ.,வும், மத்திய அரசும் விளையாடுகின்றன. சிறையில் அவரது உடல் எடை 8.5 கிலோ குறைந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது,”என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் கூறினார். .இது குறித்து, சஞ்சய் சிங் கூறியதாவது: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் இருந்து விரைவில் வெளியே கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நடக்கலாம். அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்தபோது அவரது எடை 70 கிலோவாக இருந்தது. அதுவே இப்போது 61.5 கிலோவாக குறைந்துள்ளது. அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது.

உடல்நிலை

சிறைக்குள் மருத்துவப் சோதனைகள் எதுவும் செய்யாததால், எடை தொடர்ந்து குறைவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த எடை இழப்பு சில தீவிர நோய்களின் அறிகுறி என டாக்டர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவாலின் குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து கவலை அடைந்துள்ளனர். பா.ஜ., மற்றும் மத்திய அரசு கெஜ்ரிவாலை சிறையில் வைத்து அவரது உயிருடன் விளையாடுகின்றன.

சதி

அவர் சில கடும் உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என சதி செய்கின்றனர். அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி விட்டது. இதே விவகாரத்தில் சி.பி.ஐ., தொடர்ந்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் கெஜ்ரிவால் இன்னும் சிறையில் இருக்கிறார். அவரை விரைவில் வெளியே அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஜூலை 13, 2024 18:52

கெஜரிவால் தான்.... நாட்டின் சட்டத்துடன் விலையாண்டார்.... 8 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 13, 2024 17:02

அவரை நிம்மதியாக உண்டு.


Swaminathan L
ஜூலை 13, 2024 17:00

தேர்தலுக்கு முன் அதிஷி, கெஜ்ரிவால் உடல் எடை ஆறரை கிலோ குறைந்து இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி விட்டது என்றார். இன்சுலின் கொடுக்காததால் உயிருக்கு ஆபத்து என்றார். இப்போது, சஞ்சய் சிங் கெஜ்ரிவால் எடை இன்னொரு தடவை ஆறரை கிலோவுக்கு மேல் குறைந்து போய் இரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைவாகப் போய் விட்டது என்கிறார். நாட்டில், ஏன் உலகிலேயே வேறு எந்த ஒரு டயாபெடிக்காரருக்கும் இந்த மாதிரி நேர்ந்ததில்லை.


Nandakumar Naidu.
ஜூலை 13, 2024 16:36

ஆம் ஆத்மி கட்சி நாடகமாடுகிறது. சூழ்ச்சி நிறைந்தவர்கள். இவர்கள் தில்லி மக்கள் உயிருடன் விளையாடவில்லையா?


kalyan
ஜூலை 13, 2024 16:19

நாட்டுக்கு எதிராக சதி எய்த பணத்தில் வித விதமாக அனுபவித்து அடைந்த வியாதி. அதை குணமாக்க மக்கள் வரிப்பணத்தில் சிறைச்சாலையின் கடமை என்றால் அது ஏற்புடையது அல்ல. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தான். சிறைச்சாலையில் அரசு மருத்துவர்கள் சோதனை செய்து வேண்டிய சிகிச்சைசெய்வார்கள்


SANKAR
ஜூலை 13, 2024 18:37

low sugar is as bad and dan gerous as high sugar.consult your doctor before making absurd comments


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ