உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல்: முதல்வர் சித்தராமையா வேதனை

என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல்: முதல்வர் சித்தராமையா வேதனை

மைசூரு: ''வரும் 15ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் 'மூடா' குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிப்பேன். என் மனைவி விஷயத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரில் அவர் அளித்த பேட்டி: 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. என் மனைவிக்கு, மனை ஒதுக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ., சர்ச்சையாக்குகிறது. அனைத்தும் சட்டப்படி தான் நடந்தது. வரும் 15ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் 'மூடா' குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிப்பேன்.நிலத்தை இழந்தவர்களின் நிலை வேறு. இது, எங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய வழக்கு. எங்கள் நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, என் மனைவி கேட்கிறார். விஜயநகரில் எங்களுக்கு ஒரு மனை தருமாறு கேட்கவில்லை. சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என, ஆணையமே ஒப்புக் கொண்டது. அப்படி இருக்கையில், எது சட்ட விரோதம்? உங்கள் நிலத்தில் இதுபோன்று செய்தால், அமைதியாக விட்டுவிடுவீர்களா?.மூடாவில் நடந்த நில விஷயம் குறித்து, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரிக்கின்றனர். மனை ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டோம். சட்டவிரோதம் என புகார் வந்தால், சம்பந்தப்பட்டோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Palanisamy Sekar
ஜூலை 10, 2024 20:01

எல்லை மீறிப்போனால் அப்புறமா இவரும் பி சி ஆர் சட்டத்தை வைத்து பயம் காட்டுவார். மனைவியோடு நிறுத்திக்கொண்டால் மன்னிக்கலாம் அதிலும் சட்டத்துக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே. சட்டத்துக்கு புறம்பாக இருந்தால் ராஜினாமா செய்திடனும். அதுவரை பாஜக இவர்களை விடாது துரத்தும். இன்னும் விசாரியுங்கள் நம்ம ஊரில் இருந்தது போல மாமியார் பெயரில் கூட இலவசமனை வாங்கியிருப்பார்கள். காரணம் திராவிட மாடலை பார்த்து கற்றுக் கொண்டிருப்பார். இப்போ புலம்பி என்ன செய்ய... மனையை மனைவிக்கு ஒதுக்கும் முன்னர் நூறு முறை யோசித்திருக்கணும். யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சி செய்துவிட்டீர்கள். இப்போ குத்துதே குடையுதே என்றால் யார் பொறுப்பு?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2024 19:55

கருநாடக கருணா என்று முன்னொரு முறை எழுதினேன் , மிகப்பெரிய பிராடு இவர்.


Ramesh Sargam
ஜூலை 10, 2024 19:37

சித்து அவர்களே உங்கள் மனைவிக்கு கர்நாடகாவில் வேறு எங்கும் மனையே இல்லையா?


P. VENKATESH RAJA
ஜூலை 10, 2024 19:12

சித்தராமையா சொல்லுவது சரி..பா.ஜ., சிறிய விஷயத்திலும் அரசியல் செய்கிறது


Pandi Muni
ஜூலை 10, 2024 19:26

சித்தராமையாவே ஒரு பிராடு...அதெப்புட்றா நல்லவன் மாதிரியே கமெண்ட் குடுக்கிற


saravanan kumar
ஜூலை 10, 2024 20:58

மற்ற கட்சிகளுக்கு எதுவுமே தெரியாதுபோல அத்தனை யோக்கியவான்களும் இந்திய கூட்டணியில் இருப்பவர்களோ


voopees
ஜூலை 10, 2024 21:03

பின்னே அவியலா செய்வாங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை