உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி பா.ஜ.,பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு விவகாரம், நம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்க வைத்துஉள்ளது. அதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு, ஹிண்டன்பர்க் அறிக்கை உட்பட, நம் பார்லி., கூட்டத் தொடருக்கு முன் இதுபோன்ற அறிக்கைகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய சதி இருப்பதாக, பா.ஜ., -- எம்.பி.,க்கள் பார்லிமென்டில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vu7tluxv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:அமெரிக்க, 'டீப் ஸ்டேட்' அமைப்பு, அந்நாட்டின் சில செய்தியாளர்கள் குழு மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டு உள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, அதானி நிறுவனத்தை குறிவைத்தும், பிரதமர் மோடியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.இந்த சதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நேரடியாக சம்பந்தம் உள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க அரசு நேரடியாக பண உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, 'டீப் ஸ்டேட்' சதிக்கு, ஓ.சி.சி.ஆர்.பி., கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.இதை பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும், அந்நாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் இணைந்து இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் கூட்டுசதி செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sankaran
டிச 07, 2024 20:27

அமெரிக்காவிடம் ப்ரூப் உள்ளதா ?.. அப்படி ப்ரூப் இருந்தால் அதை இந்திய அரசாங்கத்திடம் குடுக்க வேண்டும் ... அத விட்டுபுட்டு கனடா பிரதமர் டுர்டோ மாதிரி பேச கூடாது ... அமெரிக்காவை கண்ட்ரோல் பண்ண நேரம் வந்து விட்டது ...


அப்பாவி
டிச 07, 2024 16:00

அப்பாடா... இனிமே நேருவை குற்றம் சொல்றதை உட்டு அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அமெரிக்கா, ஏ.ஐ, டீப் ஸ்டேட்னு எக்கச்சக்க ஐட்டம் கிடைச்சிருச்சு.


Perumal Pillai
டிச 07, 2024 14:18

What prevents modi from putting the Italian clown Taseer Jr aka RG in prison for anti national activities? We have a useless and spineless central government.


Sami Sam
டிச 07, 2024 13:10

ஒரு நாட்டின் நிறுவனத்தை பற்றி அவதூறு சொல்ல அல்லது கருத்து சொல்ல அடுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை இதே அமேரிக்காவின் எதோ ஒரு நிறுவனத்தின் மீது இந்திய இப்படி கருத்து சொன்னால் அவர்கள் அவர்கள் அனுமதிப்பார்களா அமெரிக்காவின் ஒரு நிறுவனம் சொன்ன குற்றச்சாட்டை காரணமாக கொண்டு இந்திய பாராளு மன்றத்தை முடக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மனச்சாட்சி இல்லையா


அப்பாவி
டிச 07, 2024 21:53

உள்ளூர்லேயே லஞ்சம் குடுத்து உள்ளூர்லேயே தொழில் செய்ய பணம் திரட்டுனீங்கன்னா ஓக்கே. இந்த ஊரில் லஞ்சம் குடுத்து அமெரிக்காவுல தொழில் செய்யா பணம் திரட்டுனா அது அவனோட சட்டப்படி தப்பு. உங்களுக்கு ஊழலும் வேணும், டாலரும் வேணும்னா அவனுக்கும் கட்டிங்ஸ் குடுக்கணும். அதான் கேஸ் போட்டுட்டான். இன்ஃபிசிஸ் காரன் அமெரிக்காவுல விசா ஃப்ராடு பண்ணி 283 கிடி ரூவா ஃபைன் கட்டியிருக்கான் தெரியுமில்ல. இந்தியாவுல அதை ஃப்ராடுன்னே எவனுமே சொல்லலை கோவாலு. மூர்த்தி நல்லவரு. அந்தம்மா எம்.பி ஆயிட்டாங்க கோவாலு.


MADHAVAN
டிச 07, 2024 11:59

அதானி மேல தவறு இல்லையென்றால் நீங்க எதுக்கு பயப்படுறீங்க ? விசாரணை வைக்க வேண்டியதுதானே ? அதானி ஒரு போர்ஜெரி என்று தெரிந்தனாலதான் அவன்கூட யாரும் கூட்டு வைக்காம ஓடிபோய்ட்டானுங்க,,


hari
டிச 07, 2024 14:11

அப்போ நம்ம முதல்வர் அதானிய சந்தித்தது உண்மையா மாதவா


Dharmavaan
டிச 07, 2024 17:26

இப்போது ரஷ்ய ,ஜெர்மனி பத்திரிகைகள் ராகுல்கான் சொரஸ் ,சீனா விடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மோடி அரசை கவிழ்க்கிறான் என்கிறது இந்த தேசத்துரோகியை ஏன் தன்டிக்க கூடாது


gayathri
டிச 07, 2024 09:56

solli இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் சொல்லலாமே. தேச பக்தி எனும் போர்வையில்.


kumarkv
டிச 07, 2024 20:42

You will ask indian govt should answer newyork cab driver


sankar
டிச 07, 2024 09:44

மிகச்சரியான பதிவு


Sivagiri
டிச 07, 2024 08:29

ஸ்கூல் பையனுக்கு கூட தெரியும் , கூகிள் எல்லா விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சு வச்சிருக்குது , ஆனா உளவு துறைக்கு தெரியாதா ? சிபிஐ , ஐபி , ரா , எல்லாமும் என்ன செய்யுது ?


பேசும் தமிழன்
டிச 07, 2024 08:17

ஆட்டுவிப்பவன் (அமெரிக்கா) சொல்வது போல .... இத்தாலி போலி காந்தி கும்பலை சேர்ந்த ஆட்கள் ஆடுகிறார்கள்.


Dharmavaan
டிச 07, 2024 08:06

ராகுல்கான் தேசத்துரோகி தண்டிக்கப்பட வேண்டியவன் கருணை காட்டக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை