உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா சஸ்பெண்ட்

சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவின் ஷிவ்மோகா லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ. வைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை கட்சி மேலிடம் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டது. இம்மாநிலத்தில் ஷிவ்மோகா லோக்சபா தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திருக்கு பா.ஜ., மேலிடம் சீட் வழங்கியது. தனக்கு கிடைக்கும் என ஈஸ்வரப்பா எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால், அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா கட்சி கட்டுப்பாட்டை மீறி ஷிவ்மோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு செய்தார். இந்நிலையில் பா.ஜ. மேலிடம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இதையடுத்து ஈஸ்வரப்பாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஏப் 23, 2024 07:54

பிஜேபி கட்சியில் இருப்பவர்கள்.. இப்படி நடந்துக்கொள்ள கூடாது.. அவர்களுக்கு கட்சியும்.. நாட்டு நலனும் தான் பெரிதாக இருக்க வேண்டும்.


Priyan Vadanad
ஏப் 22, 2024 21:33

கவலையை விடுங்க ஒன்றும் குடி முழுகிபோய்விடவில்லை


கல்யாணராமன்
ஏப் 22, 2024 21:06

கண்டிப்பாக ஆண்டிகள் இவரை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது


மேலும் செய்திகள்







புதிய வீடியோ