உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக முதல்வருக்கு சூனியம்: துணை முதல்வர் பகீர் தகவல்

கர்நாடக முதல்வருக்கு சூனியம்: துணை முதல்வர் பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக அரசியல் எதிரிகள் சிலர் சூனியம் வைத்துள்ளதாக துணை முதல்வர் சிவக்குமார் பகீர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் அகோரிகள் மூலம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். இங்கு காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும் என பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக அரசியல் எதிரிகள் சிலர் சூனியம் வைத்துள்ளதாக துணை முதல்வர் சிவக்குமார் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சிவக்குமார் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா, நான் உள்ளிட்டோருக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் 'சத்ரு பைரவி' யாகம் நடத்துகின்றனர். கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோயிலில்தான் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது? எதற்காக நடத்தினர்? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர்? என்பது எல்லாம் எனக்கும் தெரியும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது.

கடவுளின் ஆசி

மொத்தம் 21 வெள்ளாடுகள், 3 எருமை மாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 பன்றிகளை பலியிட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர். பில்லி சூனியம், யாகம் நடத்துகிறவர்கள் நடத்தி சதி செய்துள்ளனர். எங்களுக்கு கடவுளின் துணை இருக்கிறது. எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமாரின் இந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஜூன் 01, 2024 11:19

அப்படியே சூனியம் வைத்து இருந்தாலும் ... வைத்தது இவராக தான் இருப்பார் ....


R Kay
ஜூன் 01, 2024 01:17

நீங்களாக ஒருவர் முதுகில் இன்னொருவர் குத்தி அழியப்போகிறீர்கள். இதற்கு black magic தேவையா என்ன? சித்துவை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் mind voice மட்டும் வெளியில் கேட்டால் தெரியும் ஒருவர் மீது ஒருவருக்கு எவ்வளவு அன்பென்று.


venugopal s
மே 31, 2024 22:57

பாஜகவினர் மட்டுமே இதுபோல மூடநம்பிக்கை உள்ளவர்கள் என்று இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன். காங்கிரஸ் கட்சியினரும் அப்படித்தானா? கண்றாவி!


R Kay
ஜூன் 01, 2024 17:57

கான்+க்ராஸ் மூடநம்பிக்கையுள்ளவர்கள் அல்ல. அவர்கள் மூடர்கள்.


ஆரூர் ரங்
மே 31, 2024 22:13

ஞானசூனியத்தை சூனியத்தால் ஒன்றும் செய்ய முடியாது .


Saai Sundharamurthy AVK
மே 31, 2024 21:59

இவனுங்களோடு கூட்டணி வைத்தவர்களுக்கு தான் சூனியம் வைக்க வேண்டும்.


Ramesh Sargam
மே 31, 2024 20:24

திருட்டு அரசியல்வாதிகளுக்கு சூனியம் வைத்தால், அது அந்த சூனியம் வைத்தவனுக்கே எதிர்வினையாக மாறும். அந்த அளவுக்கு மோசமானவர்கள் நமது அரசியல்வியாதிகள்.


Sivaraman
மே 31, 2024 19:52

மக்கள் தண்ணீர் தட்டுப்பாடுக்கு கர்நாடாவில் ஏங்கி இருக்கும் பொழுது இவர்கள் சூன்ய சூழ்ச்சி பேச்சு திசைதிருப்பும் செயல் .


raja
மே 31, 2024 17:56

விடியல் கூட கூட்டணிவைத்து அவமதிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேச்சு என்று அறிக்கை விடுவார்...


என்றும் இந்தியன்
மே 31, 2024 17:54

கர்நாடக முதல்வர் ஒரு சூனியம்: துணை முதல்வர் பகீர் தகவல் -இதுதான் உண்மையான வார்த்தை


Gopi
மே 31, 2024 17:29

எதுக்கும் உங்க இண்டி கூட்டணி பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த தமிழகம் சிங்கக்குட்டிகளை கேட்டு தெரிந்து கொள்ளவும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை