உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரிய தலைவர் பதவி வேண்டாம்: ஜெ.டி.பாட்டீல்

வாரிய தலைவர் பதவி வேண்டாம்: ஜெ.டி.பாட்டீல்

பாகல்கோட்: ஹட்டி தங்க சுரங்க கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டு, இரண்டு வாரங்களாகியும், எம்.எல்.ஏ., ஜெ.டி.பாட்டீல் இன்னும் பதவி ஏற்கவில்லை. தனக்கு அமைச்சர் பதவியே வேண்டும் என முரண்டு பிடிக்கிறார்.கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு அமைந்த போது, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அமைச்சர் பதவி எதிர்பார்த்தனர். ஆனால் ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்தவர்களுக்கே, மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. எனவே எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் இருந்தனர்.அரசு அமைந்து ஏழெட்டு மாதங்களுக்கு பின், 34 எம்.எல்.ஏ.,க்களை, கார்ப்பரேஷன் வாரியங்களுக்கு தலைவர்களாக நியமித்தது. சிலருக்கு இந்த பதவியில் ஆர்வம் இல்லை; வேண்டாம் என, நிராகரித்துள்ளனர். இவர்களை சமாதானம் செய்தும் பலனில்லை.பாகல்கோட், பீளகி எம்.எல்.ஏ., ஜெ.டி.பாட்டீல், ஹட்டி சுரங்க கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு உத்தரவிட்டு, இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், அவர் இன்னும் பதவி ஏற்கவில்லை. தனக்கு அமைச்சர் பதவியே வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கிறார்.பாகல்கோட்டில் நேற்று அவர் கூறியதாவது:எனக்கு கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவி தேவையில்லை. ஹட்டி தங்க சுரங்க கார்ப்பரேஷன் தலைவராக, சில பகுதிகளில் மட்டுமே பணியாற்ற முடியும். மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க, வாய்ப்பே இருக்காது. சொகுசு காரில் மட்டுமே, செல்ல முடியும்.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், என்னை வந்து சந்திக்கும் வரை, நான் கார்ப்பரேஷன் தலைவராக பதவி ஏற்க மாட்டேன். என்னை கார்ப்பரேஷன், வாரிய தலைவராக நியமித்ததில் அதிருப்தி உள்ளது. இதை விட முக்கியமான விஷயங்கள் பற்றி, நான் அவர்களிடம் பேச வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை