உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி; காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி

34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி; காங்கிரஸ் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டதன் பின்னணி

பெங்களூரு : 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, வாரிய தலைவர்களாக நியமித்து, கர்நாடகா அரசு நேற்று உத்தரவிட்டது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது, பெரும்பாலான மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.'அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவியாவது தாருங்கள்' என, மேலிடத்துக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், வாரிய தலைவர் பதவியை நியமனத்தில், காங்கிரஸ் மேலிடம் இழுத்தடித்து வந்தது. கடுப்பான எம்.எல்.ஏ.,க்கள், வாரிய தலைவர் பதவிகளை விரைவில் நிரப்பும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.இதையடுத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இணைந்து, வாரிய தலைவர்கள் பதவிக்கு எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் தொண்டர்கள் பெயர் பட்டியலை அனுப்பினர். '36 எம்.எல்.ஏ.,க்கள், 39 கட்சி நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்கும்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தார்.ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் அனுப்பிய பெயர் பட்டியலில், சிலரது பெயரை நீக்கிவிட்டு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊரான கலபுரகியை சேர்ந்த, நான்கு பேரின் பெயர்களை சேர்த்து, மேலிடம் ஒரு பட்டியலை, கர்நாடக அரசுக்கு அனுப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மேலிட தலைவர்கள், கர்நாடகா வந்து பேச்சு நடத்துவர் என்று கூறப்பட்டது.இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகி, ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று முன்தினம் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். காங்கிரசில் அவருக்கு பதவி கிடைக்காததால், பா.ஜ.,விற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதுபோல வாரிய தலைவர் பதவி கிடைக்காமல், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., வலை விரிக்கலாம் என்று நினைத்து, காங்கிரஸ் மேலிடம் உஷாரானது.இதையடுத்து, 34 எம்.எல்.ஏ.,க்களை வாரிய தலைவர்களாக நியமனம் செய்து, கர்நாடகா அரசு நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தது.புதிய வாரிய தலைவர்களில், 17 பேர் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அங்கு ஓட்டுகளை தக்கவைத்துக் கொள்ள, காங்கிரஸ் முன்னுரிமை கொடுத்து உள்ளது. முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரு மாவட்டத்தின் அனில் சிக்கமாதுவுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.சீனிவாஸ், சிவலிங்கே கவுடா ஆகிய இருவரும் ம.ஜ.த.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனவர்கள். ரகுமூர்த்தி தனக்கு வாரிய தலைவர் பதவி வேண்டாம் என்று, காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும் அவருக்கு பதவி கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம்/ தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பெயர் வாரியங்கள்

ராய்ச்சூர் - சிந்தனுார் ஹம்பனகவுடா பத்ரேலி சிறுதொழில்கள் வளர்ச்சிக் கழகம்விஜயபுரா - முத்தேபிஹால் அப்பாஜி நாடகவுடா கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் கழகம்பெலகாவி - காக்வாட் ராஜு காகே வடமேற்கு போக்குவரத்துக் கழகம்பாகல்கோட் - பாகல்கோட் எச்.ஒய்.மேட்டி பாகல்கோட் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்துமகூரு - குப்பி சீனிவாஸ் கர்நாடகா மாநில சாலை போக்குவரத்துக் கழகம்ஹாவேரி - பேடகி பசவராஜ் நீலப்பா சிவண்ணவர் வன மேம்பாட்டுக் கழகம்சித்ரதுர்கா - ஹொசதுர்கா கோவிந்தப்பா உணவு மற்றும் பொது வினியோகக் கழகம்ராம்நகர் - மாகடி பாலகிருஷ்ணா கர்நாடகா சாலை மேம்பாட்டுக் கழகம்கதக் - ரோன் ஜி.எஸ்.பாட்டீல் கனிம வளர்ச்சிக் கழகம்பெங்களூரு - சாந்திநகர் ஹாரிஸ் பெங்களூரு வளர்ச்சி ஆணையம்பெலகாவி - பைலஹொங்கல் மகாந்தேஷ் கவுஜலகி நிதிக்கழகம்சாம்ராஜ்நகர் - சாம்ராஜ்நகர் புட்டரங்கஷெட்டி மைசூரு சேல்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட்பாகல்கோட் - பீலகி ஜே.டி.பாட்டீல் ஹட்டி தங்க சுரங்கம்யாத்கிர் - சுர்புர் ராஜா வெங்கடப்பா நாயக் கர்நாடகா மாநில கிடங்கு கழகம்ஷிவமொகா - பத்ராவதி சங்கமேஸ்வர் கர்நாடகா நில ராணுவ கழகம்ஹாசன் - அரிசிகெரே சிவலிங்கேகவுடா கர்நாடகா வீட்டுவசதி வாரியம்தார்வாட் - ஹுப்பள்ளி - தார்வாட் கிழக்கு அப்பய்யா பிரசாத் கர்நாடகா மாநில கழிவுநீர் மேம்பாட்டுக் கழகம்ஷிவமொகா - சாகர் பேளுர் கோபாலகிருஷ்ணா கர்நாடகா மாநில வன தொழில் கழகம்கோலார் - பங்கார்பேட் நாராயணசாமி கர்நாடகா நகர அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக் கழகம்மாண்டியா - மலவள்ளி நரேந்திரசாமி கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்சித்ரதுர்கா - செல்லகெரே . ரகுமூர்த்தி கர்நாடகா மாநில தொழில் ஆணையம்மாண்டியா - ஸ்ரீரங்கப்பட்டணா ரமேஷ்பாபு பண்டிசித்தேகவுடா . செஸ்காம்பெங்களூரு ரூரல் - ஆனேக்கல் சிவண்ணா பி.எம்.டி.சி.,சிக்கபல்லாப்புர் - பாகேபள்ளி சுப்பாரெட்டி கர்நாடகா மாநில விதை கழகம்தார்வாட் - தார்வாட் ரூரல் வினய் குல்கர்னி கர்நாடகா நகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்மைசூரு - எச்.டி.கோட் அனில் சிக்கமாது ஜங்கிள் லாட்ஜ்கள்ராய்ச்சூர் - ராய்ச்சூர் ரூரல் பசனகவுடா தத்தல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம்கலபுரகி - கலபுரகி வடக்கு கனீஸ் பாத்திமா கர்நாடகா சில்க் இன்டஸ்ட்ரீஸ் கழகம்பாகல்கோட் - ஹுனகுந்த் விஜயானந்தா காசப்பண்ணவர் கர்நாடகா விளையாட்டு ஆணையம்ஹாவேரி - ஹனகல் சீனிவாஸ் மானே துணை முதல்வரின் அரசியல் ஆலோசகர்சிக்கமகளூரு - சிருங்கேரி ராஜேகவுடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகம்கோலார் - தங்கவயல் ரூபகலா சசிதர் கைவினை பொருட்கள் தொழில் வளர்ச்சிக் கழகம்.பல்லாரி - கம்ப்ளி கணேஷ் கர்நாடகா கைத்தறி வளர்ச்சிக் கழகம்ராய்ச்சூர் - மஸ்கி பசனகவுடா துர்விஹால் கர்நாடகா மாநில கதர், வேலைவாய்ப்பு கழகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ