உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்த பெலகாவி பக்தர்கள் உடல்கள் வந்தன

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்த பெலகாவி பக்தர்கள் உடல்கள் வந்தன

பெலகாவி; கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த, பெலகாவி பக்தர்கள் நான்கு பேரின் உடல்கள் நேற்று சொந்த ஊருக்கு வந்தன.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெலகாவி நகரின் வடகாவியை சேர்ந்த ஜோதி ஹடரவாத், 44, அவரது மகள் மேகா ஹடரவாத், 24, சிவாஜிநகரின் மகாதேவி, 48, ஷெட்டிஹள்ளியின் அருண் கோர்படே, 61 ஆகியோர் இறந்தனர்.இவர்களின் உடல்கள் பிரயாக்ராஜில் இருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. கர்நாடக பவன் அருகில் உள்ள மருத்துவமனையில், நான்கு பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.பின், மகாதேவி, அருண் கோர்படே உடல்கள் டில்லியில் இருந்து பெலகாவிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.ஜோதி, மேகாவின் உடல்கள் விமானம் மூலம் கோவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ஆம்புலன்ஸ்கள் மூலம் உடல்கள் பெலகாவிக்கு வந்தன.நான்கு பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுதனர். இன்று இறுதிசடங்கு நடக்கிறது. உயிரிழந்த மேகாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம்?

'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று ம.ஜ.த., கூறியிருப்பதாவது:கேரளாவின், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. அதே போன்று, கும்பமேளாவில் நடந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த கன்னடர்களுக்கு, மாநில அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும்.உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது.இவர்களின் குடும்பத்தினருக்கு வெறும் ஆறுதல் கூறினால் மட்டும் போதாது. 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, தங்கள் கட்சி மேலிடத்தை மகிழ்விக்க, உடனடியாக நிவாரணம் வழங்கியதை போன்று, கும்பமேளாவில் நடந்த அசம்பாவிதத்தில் இறந்த கன்னடர்களுக்கும், உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ