உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவைத் தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்தன

குவைத் தீ விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தடைந்தன

கொச்சி: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி கொண்டு வரப்பட்டது.குவைத்தின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம்( ஜூன் 12) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 49 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் குவைத் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உடலை இந்தியா கொண்டு வர விமானப்படைக்கு சொந்தமான சி 130 என்ற விமானம் நேற்று குவைத் சென்றது. அங்கிருந்து உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துக் கொண்டு வந்த விமானம் கொச்சி வந்தடைந்தது. விமானத்தில் இருந்து 31 உடல்கள் கீழே கொண்டு வரப்பட்டன. எஞ்சிய 14 உடல்கள் டில்லி கொண்டு செல்லப்பட உள்ளன.விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் கீர்த்தி வரதன் சிங், சுரேஷ் கோபி, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், தலைவர்கள், தமிழக அரசு சார்பில் செஞ்சி மஸ்தான் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். சர்வ மத பிரார்த்தனையும் நடந்தது. இதன்பிறகு, இறந்தவரின் உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு தமிழர்களின் உடல் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அனுமதி கிடைக்கவில்லை

இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: குவைத் செல்வதற்கு, அனுமதி கிடைக்காதது துரதிர்ஷ்டம். தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்களும். சிகிச்சையில் உள்ளவர்களில் பெரும்பாலானோரும் எங்களது மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Azar Mufeen
ஜூன் 15, 2024 05:17

எதிலும் அரசியல் செய்ய வேண்டும்


Ram pollachi
ஜூன் 14, 2024 16:12

அமைதியாக இந்தியாவில் இருந்திருந்தால் இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டிருக்காது அல்லவா! நாட்டில் வேலை இல்லை என்று சொல்லுவதே வேலை ஆகிவிட்டது. தினமும் ஒரு அவதாரம் எடுக்காமல் தனித்துவத்தை காட்டினால் ரசிக்கலாம், பாராட்டலாம் !


Kannan Soundarapandian
ஜூன் 14, 2024 15:04

பெற்றோர்களுக்கு தாங்க முடியாத இழப்பு.


ஆரூர் ரங்
ஜூன் 14, 2024 14:55

கேரளாவிலிருந்து கொண்டு வருவதால் சு வெங்கடேசன் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். அல்லது முதலாளி விடியலின் ஸ்டிக்கரை அவரே ஒட்டி பெயர் வாங்கலாம்?


கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 14, 2024 14:23

இவர்கள் வேலை செய்ய சென்று உயிரை விட்டவர்கள். இவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்.


Ram pollachi
ஜூன் 14, 2024 13:54

இந்தியாவில் இல்லாத வேலை வாய்ப்பா குவைத்தில் இருக்கு? கிட்டியது மதி என்ற மனம் இல்லை... எவன் பேச்சை கேட்டு அங்கே போனார்களோ அவர்களிடமே இழப்பீடு வாங்கிக் கொள்ளட்டும். திறமையில்லாத தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்.


Ala Cho
ஜூன் 14, 2024 14:52

ராம் பொள்ளாச்சி , இந்தியா ஜனதொகை மொத்தமும் இந்தியாவிலே இருந்துவிட்டால் நாட்டின் வருமானம் குறையும் , வேலையில்லா திண்டாட்டம் ... நீ இதை சொல்ல எந்த உரிமையும் இல்லை ,தகுதியும் இல்லை .அவரவர்கள் அவரகள் கஷ்டத்தை சமாளிப்பார்கள் . நீ யாருக்கும் எந்த உதவியும் செய்ய போவதில்லை அதனால் அமைதியாக இருப்பது நன்று ......


SUBRAMANIAN P
ஜூன் 14, 2024 13:39

இங்க அரசியல்வாதிகளும், லஞ்ச லாவண்ய அரசு அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் இன்னும் பெரிய ஏமாற்றுக்காரர்களும் செழித்து கொழித்து வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தன் குடும்பத்துக்காக வேலை செய்யபோய்விட்டு உயிரிழந்த இவர்களின் நிலைக்கு யார் காரணம்?


Ramesh Sargam
ஜூன் 14, 2024 11:44

குவைத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவருவது மத்திய அரசு. அந்த உடல்கள் தமிழகத்தில் வந்தவுடன் அதில் ஸ்டிக்கர் ஒட்டி தற்பெருமை தேடிக்கொள்வது திருட்டு திமுக அரசு.


ram
ஜூன் 14, 2024 13:53

என்னதான் மத்திய அரசு செய்தலும் இங்கு இருக்கும் மக்கள் வோட்டு போடுவது திருட்டு திமுகாவுக்குத்தானே


சிவ.இளங்கோவன் .
ஜூன் 14, 2024 14:04

சாவிலும் உனது அரசியல் மோசமாக உள்ளது.. ஒரு உயிரை மற்ற நாட்டில் இருந்து கொண்டு வருவது மத்திய அரசின் கடமை பின்னர் மாநில அரசிடம் ஒப்படைத்த பிறகு அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள். இதில் ஸ்டிக்கர் ஒட்டி என்ன செய்ய போகின்றார்கள். இறந்தவர்களுக்கு மத்திய அரசு இரண்டு லட்சம் மாநில அரசு 5 லட்சம் நிவாரணங்களை அறிவித்துள்ளது .


Vathsan
ஜூன் 14, 2024 18:10

ரமேஷ் சரக்கு... நீ இந்தியர்கள் இறந்ததை பற்றி கண்ணீர் சிந்தவில்லை என்றல் கூட பரவாயில்லை. அவர்கள் இறந்ததை பற்றி கிண்டல் அடிக்காதே. வேண்டுமானால் மத்திய அரசின் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிக்கொள்ளவும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ