| ADDED : மார் 01, 2025 12:09 PM
புதுடில்லி: டில்லியில் தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகவே விமானங்கள், பள்ளிகள், மால்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. இது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1yc7swp9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பாக, தலைநகர் டில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு ஏராளமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டில்லியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி போலீசாருக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக இல்லத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அரசு பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து டில்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.