உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொகுசு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சொகுசு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: திருப்பதியை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள 10 சொகுசு ஹோட்டல்களுக்கு, இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள நான்கு சொகுசு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனைக்குபின் அது வதந்தி என தெரியவந்தது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மரியாட், பார்டூன், லெமன் ட்ரீ உட்பட 10 சொகுசு ஹோட்டல்களுக்கு இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.இதில், 'உங்கள் ஹோட்டல் வளாகத்தில் கருப்பு நிற பையில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். எனக்கு, 46.24 லட்சம் ரூபாய் அளிக்காவிட்டால், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன் 'அந்த வளாகம் முழுதும் ரத்தக்கறை படியும். வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும், அவற்றை வெடிக்க செய்துவிடுவேன்' என குறிப்பிடப்பட்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகிகள், போலீசாருக்கு உடனே தகவல் அளித்தனர். இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோட்டல்களில், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் போலீசார் சோதனையிட்டனர். இதில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Apposthalan samlin
அக் 28, 2024 11:09

வெடிகுண்டு புரளி வாடிக்கை ஆகி விட்டது ஏன் பிடிக்க முடிய இல்லை ?அவளுவு தான் நம்மிடம் தொழில் நுட்ப்பம் உள்ளதா ? பக்கெட் இல் எண்ணெய் அள்ளுகிற தொழில் நுட்ப்பத்தை வைத்து ஒரு போதும் குற்றவாளிகளை பிடிக்க முடியாது .


வைகுண்டேஸ்வரன்
அக் 28, 2024 10:38

இதுவே பிஜேபி ஆளாத மாநிலமா இருந்திருந்தால் திராவிட, விடியா அரசு என்றெல்லாம் போட்டு தாக்கியிருக்கலாம்.. வட போச்சே.


Ganapathy
அக் 28, 2024 11:21

அட தறுதலை திருட்டுத்திராவிடிய பயலே ஆளுங்க சாவலயேன்னு வருத்தமா?


Amruta Putran
அக் 28, 2024 08:56

Marma Nabargal?


VENKATASUBRAMANIAN
அக் 28, 2024 07:51

இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. ஒரு கும்பல் திட்டமிட்டு செய்வதாக தெரிகிறது. அரசு மெத்தனமாக இருக்கக்கூடாது


RAJ
அக் 28, 2024 07:13

பன்னுவ பஞ்சர் ஆக்கத்தவரை இது தொடரும்..


Kasimani Baskaran
அக் 28, 2024 05:16

பொதுவாகவே கவனத்தை திசை திருப்ப இது போன்ற வேலைகளில் கிரிமினல்கள் வேலை செய்வார்கள். ஆகவே காவல்துறை எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


சமீபத்திய செய்தி