உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மீண்டும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேற்று ஒரே நாளில் மட்டும், 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு சமூக வலைதளம் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், இந்த மிரட்டல்கள் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மிரட்டல்களால் விமான நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதுடன், பயணியருக்கும் கால தாமதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடந்த, 14 நாட்களில், 350க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்நிலையில், நேற்றும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆகாசா நிறுவனத்தின் 15 விமானங்கள், இண்டிகோவின் 18; விஸ்தாராவின் 17 என மொத்தம் 50 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இதையடுத்து அந்த விமானங்கள் அனைத்தும், முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.L.Narasimman
அக் 28, 2024 08:16

குற்றம் செய்தவர்களுக்கு அரபுநாடுகளில் உள்ளதுபோல் கடுமையான தண்டனைகள் தரவேண்டும். மனித ஒழுக்கம் குறைந்து மிருகத்தனம் அதிகமாவதால் அங்குள்ளதுபோல் தண்டனை இப்போது தேவை.


VENKATASUBRAMANIAN
அக் 28, 2024 07:53

அரசு உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு கும்பலதிட்டமிட்டு செயல் படுகிறது.


Muguntharajan
அக் 28, 2024 07:19

இதை தடுக்காமல் பாஜக அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெட்கக்கேடு .


Kasimani Baskaran
அக் 28, 2024 05:29

விபிஎன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நுகர்வோர்களை கோர்ட் ஆர்டர் இல்லாமல் பகிர மாட்டார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தனிப்பட்ட தகவல்களை கவனமாக பாதுகாப்பதால் இது போன்ற சிக்கல்கள் வருகிறது. நாட்டுக்கு நாடு ஒப்பந்தம் போட்டால் சிக்கல் தீரும்.


சமீபத்திய செய்தி