உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது விவகாரத்தில் பேசி முடிவெடுங்க!: டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை

மேகதாது விவகாரத்தில் பேசி முடிவெடுங்க!: டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.இன்று (ஜூலை 31) பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 'மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என வலியுறுத்தினார். அப்போது, 'மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். தமிழகமும், கர்நாடகாவும் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும்' என பிரதமர் மோடி, சிவகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subramaniam Mathivanan
ஜூலை 31, 2024 19:42

ராகுல் மற்றும் காங்கிரஸ் பார்லிமெண்டில், வெளியேயும் நடத்தும் ஒத்துழையாமை மற்றும் எதையும் எதிர்ப்பது என்பதால் மோடி அவர்களும் இரண்டு மாநிலங்களும் பேசி ஒரு புரிதல் வரட்டும் என்கிறார்


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 18:54

காங்கிரஸ் மத்தியில் ஆண்டால், மேகதாது அணைகட்டப்படும்.


Swaminathan L
ஜூலை 31, 2024 17:29

இரு மாநில இண்டி கூட்டணி அரசுகளும் உட்கார்ந்து பேசினால் மத்திய அரசை மேற்கொண்டு குறை, குற்றங் கூற வழியில்லாமல் போகுமே.அதனால், மாறி மாறி இரு மாநில அமைச்சர்களும் மோடிஜியை டர்ன் போட்டு சந்தித்து ஒப்புதல் கொடுங்க, கொடுக்கக் கூடாது என்று வற்புறுத்தியபடி காலந் தள்ளலாம்.


Easwar Kamal
ஜூலை 31, 2024 17:02

தலை என்ன சொல்றர்னா இப்படியே ரெண்டு மாநிலமும் அடிச்சுக்கோங்கோ நாங்க பார்த்துகிட்டு இருப்போம். எங்களுக்கு எப்படி மக்கள் கிட்ட காசு அடிக்கிறது அதை எப்படி கஜன்னல போய் சேர்க்கிறது அது மட்டும் தன தெரியும். நாட்டு மக்கள் நல்ல இருத்தல் என்ன நாசமாகி போனால் எனக்கு என்ன? நல்ல பிரிதமர் வாழ்க vaigam


Muthu Kumaran
ஜூலை 31, 2024 17:41

கூட்டு களவாணிகள் இடம் இப்படி தான் பேச வேண்டும் . காங்கிரஸ் - ராகுல் காந்தி, திருமா , ஸ்டாலின் - இருக்கும் வரை காவிரி பிரச்சனை தீர்வு எட்டப்படாது


K.Muthuraj
ஜூலை 31, 2024 21:02

அரசு கஜானால தான போகுது.


Apposthalan samlin
ஜூலை 31, 2024 16:54

மேட்டூர் அனை நிறைந்த பின்னர் மேகதாது அனை நிரப்ப வேண்டும் என்று ரெண்டு மாநிலமும் ஒப்பந்தம் போட்டு மத்திய அரசு ஆணை விவகாரத்தை எடுத்து கொள்ள வேண்டும்


Barakat Ali
ஜூலை 31, 2024 16:37

சித்தராமையா மேல புச்சா கேசு போடுங்கோ தல .... அப்புறம் என்மேல உள்ள கேஸுங்களை வாபஸ் வாங்குங்க .....


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 15:46

எப்போது இது அரசியலாக்கப்பட்டதோ அதிலிருந்து தீர்வும் அரசியல்வாதிகள் மூலம் கிடைக்காது என்றாகிவிட்டது.


Vijay D Ratnam
ஜூலை 31, 2024 15:29

காவிரி நீர்க்காக விவசாய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி, ஜெயலலிதா கடும் சட்டபோராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெற்று அமைக்கப்பட்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த தீர்க்கமான உத்தரவு இருக்கும் போது, என்ன ஒக்காந்துகிட்டு பேச்சு, படுத்துக்கிட்டு பேச்சு வேண்டிக்கிடக்கு.


Vijayakumar Srinivasan
ஆக 01, 2024 02:41

இரும்பு பெண்மணி.தான்.இப்போதுஇருந்திருந்தால்.நிலைமையேவேறுதான்சார்


Mr Krish Tamilnadu
ஜூலை 31, 2024 15:22

நதி நீர் ஆணையம் நடைமுறை, விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து பிரச்சனைகளை சரி செய்ய தாங்கள் கட்சியிடம் சரக்கு இல்லை. ஜிஎஸ்டி, அந்த சீர்திருத்தம் இந்த சீர்திருத்தம் என அதற்கு மட்டும் தான் ஐடியாக்கள் உள்ளதா?


Gopalakrishnan Thiagarajan
ஜூலை 31, 2024 14:59

மேகதாது அணை கட்டும் பணி தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் முழு உரிமையும் அதற்கே இருக்க வேண்டும். பெங்களுருக்கான தண்ணிரை காடு கொடுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை