| ADDED : செப் 29, 2024 04:52 PM
லக்னோ; ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கு தலித் மக்கள் ஓட்டு போட வேண்டாம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது; ஹரியானாவில் ஆட்சியில் இல்லாத போதும், தலித்துகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது, புறக்கணிக்கிறது. இதுபோன்ற தருணத்தில் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் தலித் மக்கள் வாக்களித்து, தங்கள் ஓட்டை வீண் செய்ய வேண்டாம்.மேலும் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. எனவே, தலித்துகள் நலன்கள், உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்க போராடி வரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.