உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பா.ஜ., பிரமுகர் கைது

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பா.ஜ., பிரமுகர் கைது

பெங்களூரு: கர்நாடகா ம.ஜ.த.,வைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா மீதான ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக பா.ஜ,வைச் சேர்ந்த தேவராஜ் கவுடாவை நேற்று போலீசர் கைதுசெய்தனர்.கர்நாடகா மாநிலம் ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும், வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது பற்றி, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. பிரஜ்வல் இப்போது ஜெர்மனியில் உள்ளார்.இந்நிலையில் வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, பிரஜ்வல் தந்தை ரேவண்ணா மீது, மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ரேவண்ணா, அவரது உறவினர் சதீஷ் பாபு, , ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று திடீர் திருப்பமாக பா.ஜ., பிரமுகரும் வழக்கறிஞருமான தேவராஜ் கவுடாவை ஹரியூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 11:09

காங்கிரஸ் அரசு என்பதால் எப்படியாவது பாஜகவை முடக்க கர்நாடகாவில் சதி நடக்கிறது D K சிவகுமார் கைது செய்ய பட்டு உள்ளே வைத்ததற்கு பழி வாங்க காரணம்


rao
மே 11, 2024 09:53

Siddamullah Khan following the footsteps of THIRUTU DRAVIDIAN PARTY.


Kasimani Baskaran
மே 11, 2024 07:28

கூட்டணியில் இருந்தவரை அவர்கள் ஆபாச வீடியோ ஆசாமிகள் என்பது காங்கிரசுக்கு தெரியவே தெரியாது பெண்களுக்கு எதிராக எவன் செயல்பட்டாலும் கட்சி சார்பு பார்க்காமல் உள்ளே தூக்கி வைத்து நொங்கெடுக்க வேண்டும்


தனேஷ்
மே 11, 2024 06:19

ஐயய்யோ... பொய்யா ஆபாச வழக்கு போடறாங்களே....ரொம்ப நல்லவங்களாச்சே....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ