உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை

மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூர்க்கத்தனமான, 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து, உயிரிழப்போர் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு இன நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆலோசனை

இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள், நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அவர்கள் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வெளிநாட்டு ரகம் உட்பட மிகவும் மூர்க்கதனமாக உள்ள, 23 வகை நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு நேற்று அனுப்பியது. அதில் கூறப்படுவதாவது:வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், மிகவும் மூர்க்கத்தனமாக செயல்படும் 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

இனப்பெருக்கம்

ஏற்கனவே வளர்க்கப்படும் இந்த வகை நாய்களின் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க, அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் வகைகளை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 1.பிட்புல் டெரியர் 2.டோசா இனு 3.அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர் 4.பிலா பிரேசிலிரோ 5.டோகோ அர்ஜென்டினோ 6.அமெரிக்கன் புல்டாக் 7.போர்போயல் 8.கங்கல் 9.மத்திய ஆசிய ஷெப்பர்ட் 10.காகசியன் ஷெப்பர்ட் 11.தென் ரஷ்ய ஷெப்பர்ட் 12.டோர்ன்ஜாக் 13.ஜப்பானிய டோசா மற்றும் அகிதா 14.மாஸ்டிப்ஸ் 15.ராட்வீலர் 16.டெரியர்ஸ் 17.ரோடீசியன் ரிட்ஜ்பேக் 18.ஓநாய் நாய்கள் 19.கனாரியோ 20.அக்பாஷ் 21.மாஸ்கோ காவலர் 22.கேன் கோர்சோ 23.பேண்டாக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandhra Mouleeswaran MK
மார் 15, 2024 20:39

பார்த்தீர்களா? "வெளி நாட்டில் இருந்து" எது இறக்குமதி ஆனாலும் வம்புதான் இது இயற்கை ஒரு இயற்கைச் சூழலில் பிறந்து வளரும் ஒரு விலங்கு வேறுபட்ட ஒரு அந்நியச் செயற்கைச் சூழலின் வாழ நேரும் போது அதன் மன உளைச்சல் இப்படி வெளிப்படுகிறது. இதுதான் வட்டாரப் பயிர்கள், தாவரங்கள், பறவைகள், மிருகங்கள் அனைத்திற்கும் பொருந்தும். ஒரு எஸ்கிமோ ஆளால் ஈரோட்டின் வெய்யிலில் ஒரு நாள் கூட வாழ முடியாது இல்லையா? அல்லது ஒரு, குவைத் அபுதாஹிர் சைபீரியாவில் ஒரு நிமிட நேரம் கூட உயிருடன் இருக்க முடியாது நம் வீட்டுக் காவலுக்கு ஏன் நம் நாட்டு நாய்கள் போதாதா? தொட்டதெற்கெல்லாம் "வெளிநாட்டு இறக்குமதி" என்பதும் "வெளிநாட்டு, உள்நாட்டு இனக்கலப்பு" எம்பதும் உயிரினத் துரோகம்


Raj
மார் 15, 2024 16:59

அப்பிடியே பிராகெட்ல இங்கிலிஷ்லயும் போட்ருக்கலாம். படிக்க வசதியா இருந்திருக்கும்.


DVRR
மார் 15, 2024 16:46

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து, உயிரிழப்போர் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது???விலங்கு நல ஆர்வலர்கள், நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அவர்கள் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வெளிநாட்டு ரகம் உட்பட மிகவும் மூர்க்கதனமாக உள்ள, 23 வகை நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.???கொஞ்சமாவது இந்த செய்தியில் ஒப்புதலில் அறிவு ஒரு சதவிகிதமாவது இருக்கின்றதா???????வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாயை முடித்தவரை மற்றவர்களை கடிக்காமல் பார்த்துக்கொள்கின்றார்கள். ஆனால் வீதியில் திரியும் நாய் கடித்துதான் வீதியில் நடந்து போகும் மக்கள் இறக்கின்றார்கள் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து அல்லவே அல்ல . Every year, over 55,000 people are killed by dog attacks globally, with India accounting for 36% of the global deaths due to rabies. As per available information, it causes 18 000-20 000 deaths every year in India. தெருநாயை இந்தியாவில் உடனே ஒழிக்கவேண்டும், அதற்குத்தான் மத்திய அரசு மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். வீட்டில் நாய்கள் வளர்ப்பதினால் வரும் ஒரே மிக மிகப்பெரிய தொல்லை எப்போது பார்த்தாலும் குலைத்துக்கொண்டே இருக்கின்றது (எங்கள் பக்கத்து பிளாட்டில் இதே பெரிய தொல்லையாய் போய்விட்டது).


அருண் குமார்
மார் 15, 2024 16:09

கருத்து சொன்னா எதிர் கருத்து சொல்லாமல் கடித்து குதறும் விடியல் கட்சிக்காரங்களை சேர்த்து தடை செய்து இருக்கலாம்


venugopal s
மார் 15, 2024 15:44

அதேபோல் மதவெறியை தூண்டும் அரசியல் அமைப்புகளுக்கும் தடை விதிப்பார்களா?


Anand
மார் 15, 2024 18:28

புள்ளி கூட்டணிகளை தானே? தடை தேவையில்லை, அவர்களாகவே அழிந்து போவார்கள்...


Krishna Gurumoorthy
மார் 15, 2024 12:50

எங்கள் தெருவில் ஆட்சி நடத்தும் நாய்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் நாங்கள் படும் கஷ்டம்


Paraman
மார் 15, 2024 12:06

இதுங்கெல்லாம் பாவம்...நன்றியுள்ளது ...வெறி பிடித்தால் தான் பிறரை கடிக்கும் அவர்கள் உயிர்க்கு கேடு விளைவிக்கும் ..... .ஆனால் 1950....இல் இருந்து தமிழகத்தில் '21.ம் பக்க திராவிடியா பயல்கள்'' என்ற ஒரு கொடிய வெறி பிடித்த விலங்குகளை விடவும் மோசமான, மனித குலத்திற்க்கே அதிக கேடு விளைவிக்கும் ஒரு நாசகார மனித ரூபத்தில் இருக்கும் கொடும் மிருகங்கள் இந்த லிஸ்டில் இடம் பெறவில்லையே எசமான் ....அந்த மனித மிருகங்களினால் பாதிக்கப்பட்டு உடமைகள், உரிமைகள், உணர்வுகள், கற்பு, மானம், சுய மரியாதை, சொத்துக்கள், இடம் , நிலம், மதிப்பு மற்றும் உயிரையும் இழந்த மக்கள் பல லட்சம் பேரு .....அதுகளை தடை செய்து இந்தியாவை விட்டு ஒழித்து கட்டினால் தான் இந்திய நாடும் மக்களும் நலம் பெற முடியும்


angbu ganesh
மார் 15, 2024 09:37

appadiye தான் தன குடும்பம்னு வாழற, மக்களை பற்றி கவலை படாத மனித விலங்குகளுக்கும் தடை விதித்தல் நல்லது


N SASIKUMAR YADHAV
மார் 15, 2024 08:12

வளர்ப்பு நாய்களை தெருக்களில் உரிமையாளர்கள் பராமரிப்பு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள் அவர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும் .


g.s,rajan
மார் 15, 2024 07:14

இந்தியாவில் உயிர்க்கொல்லி ரேபிஸ் நோயைப் பரப்பும் சொறி நாய்களுக்கு தெரு நாய்களுக்குத் தடை ஏதும் இல்லை....


மேலும் செய்திகள்













புதிய வீடியோ