உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு சேவை பெறுவதற்கு லஞ்சம்: 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல்

அரசு சேவை பெறுவதற்கு லஞ்சம்: 68 சதவீத நிறுவனங்கள் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசு சேவைகள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக, 68 சதவீத தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.'லோக்கல் சர்க்கிள்' எனப்படும் சமூக வலைதள அமைப்பு, அரசு பணிகள் பெறுவதற்காக தொழில் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, 159 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு நிறுவனங்களுக்கு சப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்தம் பெறுவது, பணிக்கான தொகையை பெறுவது போன்றவற்றுக்கு, கடந்த ஓராண்டில் லஞ்சம் கொடுத்ததாக 68 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. கொடுக்கப்பட்ட மொத்த லஞ்சத்தில் 75 சதவீதம், சட்டம், உணவு, சுகாதாரம், மருந்து போன்ற துறைகளுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சிகள், மின்சாரத் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும், 18,000 நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றில், 54 சதவீதம் பேர், கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 46 சதவீதம் பேர், நடைமுறைகள் வேகமாக நடப்பதற்காக தாமாக லஞ்சம் கொடுத்ததாகக் கூறிஉள்ளனர்.'அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான், வேலை சுலபமாகவும், வேகமாகவும் நடக்கும். லஞ்சம் வாங்குவது ஒரு நடைமுறையாக மாறியுள்ளது' என, பெரும்பாலான நிறுவனங்கள் கூறியுள்ளன. லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகளை பெற்றுள்ளதாக 16 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 19 சதவீதம் பேர், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.அரசு துறைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, 'இ - மார்க்கெட்' எனப்படும் ஆன்லைன் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்து. இது, லஞ்சத்தைக் குறைத்துள்ளது. ஆனாலும், சப்ளை செய்வதற்கான தகுதி பெறுவது, ஒப்பந்தம் பெறுவது, பணிக்கான தொகையை பெறுவது போன்றவற்றில் லஞ்சம் குறையவில்லை.டிஜிட்டல் மயமாக்கம், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், லஞ்சம் வாங்கும் நடைமுறை மாறவில்லை. கதவுக்குப் பின்னால் லஞ்சம் வாங்குகின்றனர். லஞ்சம் குறையவில்லை என்றாலும், முன்னர் இருந்ததைவிட, கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுக்கும் காலம் மற்றும் தொகை அளவு குறைந்துள்ளதாக தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
டிச 09, 2024 20:32

எல்லாத்துறைகளிலும் நிறைய சீர்திருத்தம் செஞ்சிருக்கோம்னு பெருமிதப் படறாரு. இதுக்குத்தானா கோவாலு?


R S BALA
டிச 09, 2024 19:51

லஞ்சமெல்லாம் இந்த யுகத்தில் ஒழிய போவதில்லை.. ஒவ்வொரு தனிமனிதனும் லஞ்சம் ஒழிந்ததாக கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம்..அல்லது ஒழிப்பதாக சினிமாவில் ஹீரோ வசனம் பேசலாம் .


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 09, 2024 13:13

ஆச்சரியமான செய்தி. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அனைத்து வேலைகளும் கட்சிக்காரகளுக்கே ஒதுக்கப் படுகின்றன. அனைத்து மாநில நிலைமையும் இதுவே. அப்படியிருக்க இதில் மூன்றில் இரண்டு பங்கு கட்சிக்காரர்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் வேலையை முடித்துக்கொடுக்கின்றனர் என்ற செய்தி பதவியில் அமர்ந்துவிட்டால் கட்சிக்காரர்களும் கப்பம் செலுத்தித்தான் ஆகவேண்டும் போல இருக்கிறது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 09, 2024 12:10

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தனியார் துறையில் கூட இந்த லஞ்சம் தற்போது அதிகமாகி விட்டது. காரணம் ஆசை. ஆசையை பேராசையாக மாறி லஞ்சத்தை அதிகரிக்கிறது. இலவசங்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் குவாட்டர் பிரியாணி கால் கொலுசு புடவை சேலை குக்கர் லேட்டஸ்ட் நாற்காலி இது போன்றவைகள் எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது தான் லஞ்சம் ஒழியும். மிஸ்டர் கிளின் என்ன எந்த கொம்பன் வந்தாலும் மக்கள் திருந்தா விட்டால் மக்கள் மாக்கள் ஆவார்கள்.


Barakat Ali
டிச 09, 2024 09:39

மிஸ்டர் க்ளீன் பிரதமராக இருக்கும்போது கூட இப்படியா ????


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 09, 2024 12:03

திருடானாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இலவச பஸ் ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு ஆயிரம் குவாட்டர் பிரியாணி கால் கொலுசு சேலை குக்கர் இவைகள் மேல் எப்பொழுது ஆசை ஒழிகிறதோ அப்போது லஞ்சம் தானாக ஒழிந்து விடும்.


Sekar Times
டிச 09, 2024 09:13

லஞ்சம் எங்கும் பரவிவிட்ட புற்றுநோயாகிவிட்டது. லஞ்சம் ஊழல் வழக்குகளில் மரணதண்டனைதான் கொடுக்கவேண்டும். ஓரளவு குறையலாம்.


Kalyanaraman
டிச 09, 2024 08:18

"ஊழலற்ற மத்திய அரசு" என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அந்த கனவை நிறைவேற்றி உள்ளதே பெரும் சாதனை தான். இருப்பினும், மாநில அரசுகளின் ஊழல், லஞ்சம் தாறுமாறாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம் நாடு முன்னேறுவதற்கு பெரும் முட்டுக்கட்டையே இந்த ஊழல் தான். ஊழல், லஞ்சம் இவைகளைவிட மிகப்பெரும் முட்டுக்கட்டை கடும் தண்டனையற்ற சட்டங்களும், மிக மிக தாமதமாக வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்களுமே ஆகும். துறை ரீதியான நடவடிக்கை என்பதை ஒழிக்க வேண்டும்.


அப்பாவி
டிச 09, 2024 09:21

ஊழல்னா மத்திய மாநில அனைப்புகள் எல்லாத்தையும் சேத்துதான் கல்யாணம்.


N.Purushothaman
டிச 09, 2024 11:52

செய்தி லஞ்சத்தை பற்றியது...பேசறது ஊழலை பத்தினது......


Varadarajan Nagarajan
டிச 09, 2024 07:23

லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகளை பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. என்னதான் ஆன்லைன் சேவை, ஆன்லைன் ஒப்பந்தம் என பல டிஜிட்டல் வழிகளை அரசு ஏற்படுத்தினாலும் அரசு அதிகாரிகளை நேரில் சென்று பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்தால்தான் வேலை நடக்கின்றது. இல்லையேல் அலைக்கழிப்பும் கால விரயமும்தான். இவை எல்லாவற்றையும் தாண்டி மத்திய அரசின் ஒரு துறை நேர்மையாகவும் தனியார் துறைக்கு இணையாக சேவையை அளித்துவருகின்றது. அது பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகம். மிகவும் பாராட்டத்தக்கது.


jeyakumar
டிச 09, 2024 07:13

இயற்கை தண்டனை இல்லாத நாட்டில் உண்மைக்கும், நல்லவர்களுக்கும் இப்படித்தான் மரியாதை கிடைக்கும்.மீதி 32% உள்ள நல்லவர்களால் தான் இந்த நாடு இப்படியாவது இருக்கிறது, விரைவில் நல்ல இளவு காலம் பிறக்கப்போகும் 80% ஊழல் வரும்போது


N.Purushothaman
டிச 09, 2024 07:01

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் ...அதே போல் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்காவது அரசு வேலையை பெற முடியாத அளவிற்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் ...இது ஒரு சமுதாய புற்றுநோய் ... கடுமையான சிகிச்சை தேவை ...


சமீபத்திய செய்தி