| ADDED : டிச 30, 2025 02:46 PM
புதுடில்லி: 2026ம் ஆண்டு பட்ஜெட் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.மத்திய பட்ஜெட், கடந்த 2017ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2026ல், பிப்ரவரி 1ல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mtcgd51r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக பார்லி., கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2020ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை பார்லிமென்ட் கூடியது.2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ல் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் இன்று (டிசம்பர் 30) பட்ஜெட் குறித்து, டில்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை நடத்தினர்.நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.