உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் எல்.பி.இசட் என அழைக்கப்படும். (லூட்டியன்ஸ் பங்களா ஜோன் ) என்ற இடத்தில் 3.7 ஏக்கரில் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த பங்களா ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணி வசம் உள்ளது.இந்த பங்களாவை ரூ.1400 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்தவற்காக கடந்த 2024 ஆண்டு முதல் பேச்சு நடைபெற்று வந்துள்ளது.இறுதியில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்வதாக இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது . சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை வாங்குபவர் விபரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kasimani Baskaran
செப் 04, 2025 03:38

அதிகார பூர்வ அரசு பங்களா மன்னர் குடும்பத்துக்கு சென்றது இதுவும் ஹெரால்டு மோசடி போலத்தான் இருக்கவேண்டும்.


Natarajan Ramanathan
செப் 03, 2025 23:25

எதற்கும் வக்பு வாரியத்திடம் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள்.


tamilvanan
செப் 03, 2025 22:59

இந்த பங்களா சொந்தக்காரர் யார்? நேரு குடும்பமாக இருந்தால், வரித்தொகை பாக்கியை இதிலிருந்து வசூலித்து கொள்ளலாமே .


Sun
செப் 03, 2025 22:57

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி நாட்டுக்காக தன் சொத்து ,சுகம், தனது வாழ்வு அனைத்தையும் இழந்தார். பிழைக்கத் தெரிந்த சுதந்தர போராட்ட வீரர் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் அவருக்கு பின் மகள் இந்திரா பிரதமர் பேரன் ராஜிவ் பிரதமர் கொள்ளுப் பேரன் ராகுல் எதிர்கட்சி தலைவர். 1400 கோடி பங்களா உள்ளவர் எப்படி நாட்டை, மக்களை, ஏழை மக்களை நினைத்திருப்பார்?


Artist
செப் 04, 2025 07:18

இதை நீங்க சொல்றது விநோதமா இருக்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 07:30

பொருளாதாரத்தில் ஒரு நிலைப்பாடு உண்டு. அதாவது அரசியல் வாதிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சொத்துக்கள் அவர்களுடைய பொருளாதார சக்தி எந்த அளவுக்கு உயர்கிறதோ அந்த அளவுக்கு நாட்டு மக்கள் பொது ஜனங்கள் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகும். பாமர ஜனங்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.


வாய்மையே வெல்லும்
செப் 03, 2025 22:49

மூன்று ரோஜாக்கள்.. ஐயா சாமியோவ் நான் கமலகாசன் பற்றி பேசவில்லை இப்போ பேசுவது நேரு மாமா வைப்பற்றி.. ஆனா கமலகாசன் னுக்கும் நேரு மாமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்ல ஒரு விசயத்தை தவிர.. அது என்ன கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு சினிமா டிக்கெட் கமல் ஸ்ரீதேவி நடிச்ச வெற்றி திகில் திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் பகல் காட்சி இலவசம் ..


Lake Daniel
செப் 04, 2025 03:51

நல்ல வேலை அந்த காலத்துல facebook whatsapp இல்ல


Barakat Ali
செப் 03, 2025 21:40

இன்னும் கூட அங்கே பதநீர், சிப்பி போன்ற வாசனை அடிக்குது ....


Artist
செப் 04, 2025 07:19

விரலை வைத்துக்கொண்டு ஆரூடம் பார்க்க கூடாது


ஆரூர் ரங்
செப் 03, 2025 20:46

காந்தி பிர்லா மாளிகை ஆகா கான் மாளிகை போன்ற குடிசைகளில் எளிய வாழ்க்கை வாழ்ந்ததாக படித்திருக்கிறேன். நேரு அலஹாபாத் வீட்டை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்ட பிறகு இந்தக் குடிசையில் வாழ்ந்தவரா?. அடடா வாடகையை யார் கொடுத்தா?


Subramanian Hariharan
செப் 03, 2025 20:15

இவரது வீடு அரசு உடமையாக்க வேண்டும்


Artist
செப் 03, 2025 20:40

அதை எவன் பராமரிப்பது ..திராவிட தலைவர்களில் ஒருவர் தான் வாங்கி பராமரிக்க முடியும் ?


Balasubramanian
செப் 03, 2025 20:04

ஒருவர் இப்போது பீகாரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்! அவரிடம் முதலில் ஆட்சேபணை இல்லை என்று கடிதம் வாங்கி விடுங்கள்! இல்லை என்றால் கடைசி நேரத்தில் ஏதாவது அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு என்று வீசி விட்டால் வீட்டை வாங்குபவர் பாடு பரிதாபம் ஆகிவிடும்


Amar Akbar Antony
செப் 03, 2025 20:02

அதானி அம்பானி இவர்களை விட்டால் யாமிருக்கிறோமென்று ஒரு தமிழகத்தில் வசிக்கும் குடும்பமுள்ளது. ஒரு தனித்தீவு இருப்பதாகவும் இங்கிலாந்தில் ஒரு டீமை விலைபேசியிருப்பதாகவும் சொல்றாங்க.பொதுசொத்தான பி.எஸ்.என்.எல் ன் லைன்களை அவர்கள் தம் தொலைக்காட்சிக்கு இலவசமாக இணைக்கப்பட்டதாகவும் ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை