உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்

புதுடில்லி: மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போகும் என பின்னர் வந்த தகவல்கள் வெளியாகின. மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இடம்பெறுவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மேகன் சிங் ஏற்கனவே பல முறை ஆலோசனை செய்துள்ளனர். இன்று மீண்டும் 4வது முறையாக இருவரும் ஆலோசனை செய்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சரø விரிவாக்கம் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விரிவாக்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 10 முதல் 12 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விரிவாக்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பந்தோப்பாத்யா இணையமைச்சராக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ