உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திவாலான நிறுவன பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்கலாமா? ஆர்.பி.ஐ., தலையிட காங்கிரஸ் கோரிக்கை

திவாலான நிறுவன பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்கலாமா? ஆர்.பி.ஐ., தலையிட காங்கிரஸ் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எஸ்.பி.ஐ., வங்கி, கடனில் சிக்கித் தவிக்கும் 'சுப்ரீம் இன்ப்ராஸ்ட்ரக்சர் இந்தியா' நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது: சுப்ரீம் நிறுவனத்தின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, எஸ்.பி.ஐ., வங்கி, தான் வழங்கியுள்ள கடனுக்குப் பதிலாக, நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், திவால் நிலையை ஏற்கனவே அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், சுப்ரீம் நிறுவனத்துக்கு வழங்கிய கடனில், 93.45 சதவீதத்தை திரும்பப் பெறவில்லை.இந்நிலையில், எஸ்.பி.ஐ.,யின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. மக்களின் டிபாசிட்களே கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தாமல், நிறுவனத்துக்கு சாதகமாக வங்கி செயல்படுவது நியாயமற்றது.மேலும், கடன் செலுத்த தவறும் மற்ற நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும். அது மட்டுமல்லாமல், இந்தியாவின் திவால் நடைமுறை கட்டமைப்புகளின் திறன் குறித்த கேள்வியையும் இது எழுப்புகிறது. எனவே, ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பொன்னுசாமி
செப் 25, 2024 18:19

அவன் சொல்றான். இவன் வாங்குறான்.


GoK
செப் 25, 2024 12:07

நீ எந்த வங்கியிலட வேலை செஞ்சிருக்க மவனே


Narasimhan
செப் 25, 2024 11:54

இந்த சோன் பாப்டி தலையன் இத்தாலிய குடும்பத்தின் முதன்மை கொத்தடிமை. ஆனால் இவன் கேட்பதில் நியாயம் இருக்கிறது.


C.SRIRAM
செப் 25, 2024 11:35

அவர்களின் அதவது எஸ் பி ஐ வேலையை தாங்களே பார்த்துக்கொள்வார்கள் . உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாதவர்கள் இல்ல அவர்கள் . தினமும் ஒரு வெத்து வெட்டி அறிக்கை ... இந்த கூமுட்டையிடமிருந்து


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:46

ஆர் பி ஐ இடம் முறையிடுவதும் நரேந்திர மோடியிடம் முறையிடுவதும் - இந்த விஷயத்தில் - ஒன்றுதான் .... பணமதிப்பிழப்பு அறிவிப்புச் செய்யக்கூட சுதந்திரம் இல்லாதவர்கள் அவர்கள் .....


ஆரூர் ரங்
செப் 25, 2024 09:24

சொக்கத்தங்க அம்மையார் வங்கிக்கு ஒரே போன் கால் மூலம் தரவைத்த (வாராக்)கடனை யெல்லாம் பாரதீய ஜனதா ஆட்சி வசூலிக்கணும் . அதிலும் குறை சொல்ல வந்துட்டீங்க.


Sivagiri
செப் 25, 2024 08:59

திவால் ஆகியது இவிங்கதான் , , , யார் என்று ஒரு ஈ.டி , சிபிஐ ரைடு விட்டால் தெரியும் , ,


Dharmavaan
செப் 25, 2024 08:41

சுபரீம் கம்பெனியின் தலைவர் யார்


Dharmavaan
செப் 25, 2024 08:38

காங்கிரஸ் திருடர்கள் எப்படி மல்லையா, சோக்சி,நீரவ் மோடிக்கு தகுதி மீறிய கடன் கொடுத்தான்கள் இரட்டை வேடம்


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:23

இவன் உளறுவாயன். எதுவுமே தெரியாமல் பேசுவான்