மேலும் செய்திகள்
பெரும் தவறு!
6 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
6 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
6 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
9 hour(s) ago
புதுடில்லி: பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை( சிஏஏ) அமல்படுத்த முடியாது என தமிழகம் மற்றும் கேரள அரசு அறிவித்து இருந்தாலும், குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் கீழ் வருவதால், இதில் மாநில அரசுகள் தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது.இது தொடர்பாக கூறப்படுவதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 17 வது அம்சமாக குடியுரிமையைக் குறிப்பிடும் ' 'citizenship, naturalisation and aliens' வருகிறது. சிஏஏ விதிகளின்படி, ஆவணங்களை சரி பார்க்கவும், குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்ய மாவட்டங்கள், மாநில / யூனியன் பிரதேச அளவுகளில் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் முழுக்க முழுக்க மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெற்று இருப்பார்கள். மாநில அளவில்,
மாநில அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் தலைவராக கணக்கெடுப்பு நடவடிக்கைகள் துறை இயக்குநர் இருப்பார். இவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கணக்கெடுப்பு கமிஷனர் அல்லது தலைமை பதிவுத்துறை ஜெனரலிடம் அறிக்கை அளிப்பார்.இந்த குழுவில் ஐபி எனப்படும் உளவுப்பிரிவு, வெளிநாட்டினர் பதிவுத்துறை அதிகாரி, மாநில போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழுவிற்கு இரண்டு பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். அதில் ஒருவர் மாநில அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதி ( உள்துறை செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச்செயலாளர் ( உள்துறை)). மற்றொருவர் ரயில்வேத்துறையைச் சேர்ந்தவர்.மாவட்ட அளவில்
மாவட்ட அளவிலான குழுவானது, மத்திய அரசின் கீழுள்ள தபால் துறையின் மூத்த கண்காணிப்பாளர் அல்லது கண்காணிப்பாளர் தலைமையில் செயல்படும். மாவட்ட அளவிலான குழுவில், மாவட்ட தகவல் அலுவலர் அல்லது உதவியாளர் மற்றும் மத்திய அரசு நியமிக்கும் அதிகாரி. இருவரும் மத்திய அரசின் கீழ் வருபவர்கள். இந்த குழுவிலும் இரண்டு பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஒருவர் தாசில்தார் அல்லது மாவட்ட கலெக்டருக்கு இணையான அதிகாரத்தில் உள்ளவர் மற்றொருவர் மத்திய அரசின் பிரதிநிதி. இந்த குழுவானது, ஆவணங்களை ஆய்வு செய்து, குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யும். அதற்கு, இந்தக் குழுவினர் மாநில அரசின் பிரதிநிதிகளின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் இல்லை. எனவே, சிஏஏ விதிகளை அமல்படுத்தும் நடைமுறைகளில் மாநில அரசுக்கு என தனி அதிகாரம் ஏதும் இருக்காது. தன்னிச்சையாக ஏதும் செய்ய முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
6 hour(s) ago
6 hour(s) ago | 1
6 hour(s) ago
9 hour(s) ago