உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவிலை தொட முடியுமா? பிரமோத் முத்தாலிக் சவால்

ராமர் கோவிலை தொட முடியுமா? பிரமோத் முத்தாலிக் சவால்

பெலகாவி, : ''நிப்பானி ராமர் கோவிலின், ஒரே ஒரு செங்கல்லை கூட தொட முடியாது. தைரியம் இருந்தால் தொட்டு பாருங்கள்,'' என ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சவால் விடுத்தார்.இது தொடர்பாக, பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:நிப்பானி ராமர் கோவிலை வெடி வைத்து தகர்ப்பதாக, மர்ம நபர் மிரட்டல் கடிதம் எழுதி உள்ளார். இது போன்ற மிரட்டலை ஹிந்து சமுதாயம் சகிக்காது. தற்போது இருப்பது கஜினி, கோரி பாபா இல்லை. இங்கிருப்பது இந்திய முஸ்லிம்கள் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.இந்தியாவில் உள்ள கோவில்களை பூஜிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; ஆனால் கவுரவிக்க வேண்டும். ராமர் கோவிலை தொட்டால் என்னவாகும், ஹிந்து சமுதாயம் எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை, காண்பிக்க வேண்டி வரும்.நிப்பானி ராமர் கோவில் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து ராமர் கோவில்களுக்கும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். நிப்பானி ராமர் கோவிலின், ஒரே ஒரு செங்கல்லை கூட தொட முடியாது. தைரியம் இருந்தால் தொட்டு பாருங்கள்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ