உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வை ரத்து செய்யுங்க; மாநில அரசிடம் ஒப்படைங்க: பிரதமருக்கு மம்தா கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்யுங்க; மாநில அரசிடம் ஒப்படைங்க: பிரதமருக்கு மம்தா கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு முன்பு இருந்ததைப் போல, மாநிலத் தேர்வு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என மம்தா வலியுறுத்தி உள்ளார்.மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நம்பிக்கை

நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் இயல்புநிலை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.

ரூ.50 லட்சம்

உடனடியாக மருத்துவப் படிப்புகளுக்கு முன்பு இருந்ததைப் போல, மாநிலத் தேர்வு நடைமுறையை கொண்டு வர வேண்டும். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையச் செய்யும் வகையில் உள்ளது. மாநில அரசு பொதுவாக ஒரு மருத்துவருக்கு கல்வி மற்றும் பயிற்சிக்காக ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவிடுகிறது. இவ்வாறு கடிதத்தில் மம்தா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajkumar
ஜூன் 24, 2024 23:00

மாநில அரசுக்கு கொடுங்க நாங்க கூறு போட்டு கூவி கூவி ஏலம் போட்டு கல்லா கட்டறோம். ஊழலின் மொத்த உருவம் மம்தா பானர்ஜி. ஆசையை பார்


nagendhiran
ஜூன் 24, 2024 22:49

ஏன் மருத்துவ சீட்டை விற்று கல்லா கட்ட முடியலையா?


Aroolmozhi
ஜூன் 24, 2024 22:38

கள்ளசாராயம் ?


sankar
ஜூன் 24, 2024 22:04

உருப்படாத யோசனைகளை மட்டுமே இந்த லேடி சொல்லும்


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2024 21:21

நீட் தேர்வு மாநில பட்டியலுக்கு வந்தால்தான் கள்ள குடியேறிகளுக்கு சலுகை அளிக்க முடியும்


V RAMASWAMY
ஜூன் 24, 2024 21:17

அப்பொழுது தான் கொள்ளைக்கு இன்னுமொரு வழி பிறக்கும்.


Sivasankaran Kannan
ஜூன் 24, 2024 20:25

தறுதலை கூட்டணி..


theruvasagan
ஜூன் 24, 2024 20:19

ஆசிரியர் நியமன முறைகேடு ஊழல் நடந்து மாநில ஆட்சியில்தானே. ஆகவே ஆசிரியர் தேர்வு நடைமுறையை இனிமேல் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். சரியா.


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 20:07

எதுக்கு? ரோஹிங்கியா பயலுவளை டாக்டர் ஆக்கி, சிலோன் பாய் டாக்டர் செஞ்ச மாதிரி சிசேரியன் அறுவை யுடன் 4000 பெண்களுக்கு கருப்பை நீக்கம் -ஜிஹாத் - செய்து விட்டு தற்போது கம்பி எண்ணுகிறானே? அது போல இந்தியா முழுவதும் துவங்கி வைக்கவா? திமுக கம்மிகள் நிச்சயம் செய்வார்கள்... மாநில அரசிடம் மெடிக்கல் அட்மிஷன் தருவது டேஞ்சர்....


GMM
ஜூன் 24, 2024 19:47

மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் முறைகேடு என்று கூறி மம்தா ரத்து செய்ய கோரிக்கை. மாநிலம் தேர்வு நடத்தியும் முறை கேடு இருந்தால், மாவட்டம் நடத்துமா?. மாவட்ட முறைகேடு இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள். அதன் பின் தனியார் கல்லூரி நிர்வாகிகள் ஏலம்?. அரசியல், கட்டண கொள்ளையை நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகாரம் மட்டும் நீதிமன்றத்தில் மலையளவு குவிந்துள்ளது. அரசியல், பொருளாதார குற்றம் விரைவில் தண்டிக்க முடியவில்லை. ஊழல் கோரிக்கைக்கு காரணம் வழக்காடு மன்றம்?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி