உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுங்கள்: சித்தராமையா கடிதம்

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுங்கள்: சித்தராமையா கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்' என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=seghcoee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடிதத்தில் சித்தராமையா கூறியிருப்பதாவது: பிரஜ்வல் ரேவண்ணா சலுகைகளை துஷ்பிரயோகம் செய்து தப்பி ஓடிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணா ஏப்ரல் 27ம் தேதி தனது பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் சென்றது வெட்கக்கேடானது. பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் இன்று வரை தலைமறைவாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இதுவரை நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சித்தராமையா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
மே 23, 2024 19:07

தேர்தலில் ஜெயித்து பொய் குற்றச்சாட்டுகளை வீசியவர்கள் முகத்தில் ப்ரஜிவால் கரியை பூசுவார் வீடியோவில் உள்ள புகைப்படத்தில் ப்ரிஜிவால் கிடையாது அவரை போன்ற தோற்றம் கொண்டவரை வைத்து, காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறது ரெவென்னாவை பற்றி தவறாக பேசியவர்களுக்கு மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு பிரிஜிவால் ஜெயித்தால், அவர் நிரபராதி என்று காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா?


கேசவ்
மே 23, 2024 19:07

மோடி என்ன பாஸ்போர்ட் ஆபீசரா? தத்தி.. தத்தி. விளம்பரத்துக்கு அலையும் தத்தி.


ஆரூர் ரங்
மே 23, 2024 16:38

இன்னும் சட்ட விரோதமாக இட்டாலி பாஸ்போட் வைத்திருக்கும் தலைவரை என்ன செய்யலாம்? ஜூலை நாலில் தப்பி ஓடுமுன் சொல்லுங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை