உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்ட அறிவிப்பு

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்ட அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எங்கள் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என, காவிரி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. காவிரி ஒழுங்குமுறை குழுவின் 95வது கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அனைத்து உறுப்பினர்களும், அவர்களது மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இருந்தே பங்கேற்றனர்.

ஆலோசனை

தமிழக அரசின் உறுப்பினராக, தலைமை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்றார். ஆலோசனையின்போது, மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரையில் தர வேண்டிய நிலுவை நீரை தர வேண்டுமென, புள்ளிவிபரங்களுடன் எடுத்து கூறப்பட்டது. 'மேட்டூர் அணையில் நீர் இருப்பு 20.182 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. இதில், 1,200 கன அடி நீர், குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக மட்டுமே வெளியேற்றப்படுகிறது. 'மே மாத சுற்றுச்சூழல் நீர் அளவான 2.5 டி.எம்.சி., நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.மேலும், தமிழகத்துக்கு ஏற்கனவே தர வேண்டிய நீர் அளவான, 5.317 டி.எம்.சி., மற்றும் மே மாதத்தில் தர வேண்டிய 2.5 டி.எம்.சி.,யையும் சேர்த்து, மொத்தமாக தர வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.

கோரிக்கை

ஆனால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, அம்மாநில குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருப்பதால், தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என, அம்மாநில உறுப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இருப்பினும், புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறி, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும்படி ஒழுங்குமுறை குழு சார்பில், கர்நாடகா தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது. அப்போதும், தங்கள் மாநில தேவைகளுக்குத்தான் நீர் உள்ளதென கூறி, இந்த கோரிக்கையை ஏற்க அம்மாநில அரசின் உறுப்பினர் மறுத்து விட்டார். இந்த குழுவின் அடுத்த கூட்டம், வரும் 16ம் தேதி மீண்டும் நடக்கவுள்ளது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sethu
மே 01, 2024 14:28

தமிழகத்தின் எந்த பிரச்சனையை எடுத்தாலும் அது கடைசியாக கோபாலபுரம் வீட்டில்தான் சங்கமிக்கும்


ஆரூர் ரங்
மே 01, 2024 09:22

கடும் குடிநீர் பஞ்சத்தில் திண்டாடும் அண்டை மாநிலத்திடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. கூட்டு முயற்சியாக மேக்கேதாட்டூ அணையைக் கட்டி நீரைப் பகிர்ந்து கொள்ளலாம். கர்நாடகத்தில் 40 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்.


கௌதம்
மே 01, 2024 08:55

ஸ்டிக்கர் ஒட்டும் ஸ்டாலினின் குரல் எங்க? தொண்டை கவர்வது போல


Vijay
மே 01, 2024 08:23

எங்கள் முதல்வர் கொடைக்கானலில் ஓய்வு எடுத்து கொண்டே தண்ணீர் வாங்கி தருவார்


duruvasar
மே 01, 2024 07:44

அப்போ கட்டாயம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மற்றும் தமிழக முரட்டு சிறுத்தை திருமாவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகா இரண்டாம் கட்ட தேர்தல் பிராசாரத்திற்க்கு செல்வார்கள் இருவருமே சுயமரியாதை சிங்கங்கள்


N Sasikumar Yadhav
மே 01, 2024 07:10

காவிரியில் நீர் திறந்துவிட்டு ஆற்றில் தண்ணீர் ஓடினால் மணல் எப்படி அள்ளமுடியும்


Duruvesan
மே 01, 2024 07:07

ஆக புள்ளி கூட்டணி ஜெயிச்சி விடியல் பிரதமர் ஆனவுடன் செங்கல்பட்ல கோவிட் ஊசி தயாரிச்சி உலகுக்கே விடியல் தந்தது போல, துபாய் ஸ்பெயின் சிங்கப்பூர் போயி தமிழ் நாட்டுக்கு முதலீடு கொண்டு வந்து குவித்தது போல, புதிய ஆறு கட்டுமரம் பெயரில் தமிழ் நாட்டில் உருவாக்கி உலகுக்கே நீர் தரப்படும்


D.Ambujavalli
மே 01, 2024 06:31

‘ கடா கடா என்றாலும் உழக்குப்பால், உழக்குப்பால் என்றானாம் ‘ என்பது சொலவடை மழை முற்றும் பொய்த்துவிட்டதால் இங்கு வெகு கட்டுப்பாடுகளுடன் தான் நீர் திறக்கிறார்கள் எங்கிருந்து இவர்கள் கூறும் arrears சேர்த்து நீர் தர முடியும்? ‘நூறாண்டு காணாத மழை, வரலாறு அறியாத மழை ‘ என்று பீற்றிக்கொண்டதைத் தவிர ஏரி, குளங்களை தூர் வாரி, கடலில் கலக்கும் நீரை தடுக்க எந்த ஏற்பாடும் செய்யாது ஒவ்வொரு வருஷமும் இதே பஞ்சாயத்து செய்யும் கையாலாகாத அரசுகள் என்ன மாடல் ?


sankaranarayanan
மே 01, 2024 06:30

இவர்கள் கருத்துக்கேட்டு முடிவு எடுப்பதற்கு குறைந்தது மூன்று மாதங்களாகும் அதற்குள் தென் மேற்கு பருவ மழை வந்துவிடும் பிறகு இது பற்றிய பேச்சே இருக்காது இதெல்லாம் காலத்தை வீணாக்கக்கூடிய கூட்டங்கள் பிரயோஜனம் ஒன்றுமே கிடையாது


Indhuindian
மே 01, 2024 06:08

புள்ளி கூட்டணி ஜிந்தாபாத் புள்ளி கூட்டணி கோவிந்தா எது எப்படியோ யார் எப்படியோ போனா என்ன நாம இந்த வெயில்லேந்து தப்பி எங்கேயாவது வெளிநாட்டுக்கோ கோடை வாசஸ்தலத்துக்கோ போயி உடம்ப தேதிப்போம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ