உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கடிதம்

இந்நிலையில், டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர், '' தண்ணீர் பற்றாக்குறையால் டில்லி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். யமுனா ஆற்றில் மேலும் ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajasekar Jayaraman
ஜூன் 03, 2024 09:25

நீ மோடிய திட்டு தண்ணி தானவந்துடும்.


Rajasekar Jayaraman
ஜூன் 03, 2024 09:23

நீர் நிலைகளை பாதுகாக்காமல் நீர் எங்கிருந்து வரும் இதிலே இலவச குடிநீர் சப்ளை வேறு.


va.sri.nrusimaan
ஜூன் 02, 2024 19:57

go for fasting until death b4 anyone of memorial/infront of assembly house.


sankar
ஜூன் 02, 2024 18:38

வந்தது தெரியும் போவது எங்கே - தண்ணீர் நமக்கே தெரியாது


வேதகிரி
ஜூன் 02, 2024 18:14

இப்பத்தானே தியானம் பண்ணிட்டு வந்திருக்காரு.மழை பெஞ்சு தண்ணீர் வந்துரும். பிரதமர், ஜனாதிபதி வூடுங்களுங்கு தண்ணீர் சப்ளை ஒயுங்கா பண்ணிடுங்க.


Indhuindian
ஜூன் 02, 2024 18:01

அந்த தண்ணியிலே கொள்ளை அடிசீங்க தண்ணிக்கு பஞ்சம் இருக்காது சிறை அதிகாரிகள் தண்ணிக்கு ஏற்பாடு பண்ணிடுவாங்க


Mohana krishnan
ஜூன் 02, 2024 17:30

டாஸ்மாக் ஊழல் பணத்தில் தண்ணிர் வாங்க சசொல்லுங்க


Duruvesan
ஜூன் 02, 2024 16:43

நாம வேற தண்ணில விளையாடி இப்போ ஜெயில்ல கீறோம்


lana
ஜூன் 02, 2024 16:18

மக்களின் தண்ணீர் தேவை தீர்க்க துப்பு இல்லை. அதை விட்டு விட்டு வெட்டி வேலை பார்க்க வேண்டியது


Kavi
ஜூன் 02, 2024 15:35

Drama


மேலும் செய்திகள்





புதிய வீடியோ