உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைநகரா ... ‛உலைநகரா...: டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

தலைநகரா ... ‛உலைநகரா...: டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. முங்கேஷ்பூர் பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் 126.14 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது.டில்லியில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், டில்லிக்கு வானிலை மையம் 'ரெட் அலெர்ட் ' விடுத்து இருந்தது. முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.இந்நிலையில் டில்லியின் முங்கேஷ்புர் பகுதியில் 126.14 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்னர், அதிகபட்சமாக 2002 ம் ஆண்டு 120.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் டில்லி மக்களுக்கு இந்த வெயிலும் சேர்ந்து துயரத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gokul Krishnan
மே 29, 2024 21:11

We can also ask Raul vinci , son of Antonio maino or udhavanidhi who escaped to London after election


Easwar Kamal
மே 29, 2024 20:02

ஒ இப்போ புரியுது அதான் தலை கன்னியாகுமாரி பக்கம் டேரா வா ?


P D Paul
மே 29, 2024 19:19

You can ask attukutty who is the reason for increasing temperature


Vathsan
மே 29, 2024 19:05

திறமையில்லாத ஆட்சியால், டெல்லியில் 6 டிகிரி வெப்பம் அதிகரித்து உள்ளது.


theruvasagan
மே 29, 2024 21:46

ஆமாம் திறமையான ஆட்சியால் சென்னை ஊட்டி மாதிரி குளு குளு ஆகிவிட்டதாம். குளிர் நடுக்கம் தாங்க முடியாமல்.எல்லாரும் கம்பளி போரத்துக்கொண்டு திரியறாங்களாம். போவியா.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ