உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்; ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு

ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்; ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு

புதுடில்லி: பள்ளி வகுப்பறை கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.டில்லியில் தற்போது பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேகா குப்தா செயலாற்றி வருகிறார். தற்போது, கடந்த ஆம்ஆத்மி ஆட்சி நடந்த போது 12,748 வகுப்பறைகள் கட்டுவதில் , ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டுமான ஒப்பந்தங்கள் ஆம்ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. செலவினங்களை அதிகரிப்பதற்காக, எந்த வகுப்பறைகளும் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்படவில்லை என பல்வேறு ஊழல்கள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

ஊழல் வழக்கு

இது தொடர்பாக டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லி முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சிக்கல்கள்!

ஏற்கனவே, டில்லி மதுபான முறைகேடு வழக்கில், மணிஷ் சிசோடியா சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் இருக்கிறார். அதே நேரத்தில் சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் விசாரணையில் உள்ளார். தற்போது, ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது பதியப்பட்டு வழக்குகள், இவர்கள் எதிர்கொள்ளும் சட்ட சவால்களை அதிகரிக்கிறது.

பா.ஜ., விமர்சனம்

இதனால், ஆம் ஆத்மி கட்சி மீதான தனது விமர்சனத்தை பா.ஜ., தீவிரப்படுத்தியுள்ளது. டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் ஆய்வு நடத்த பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
ஏப் 30, 2025 19:07

தமிழகத்தின் டாஸ்மாக் ஊழலிலும் உடனே நடவடிக்கை எடுங்கள். Fast Track கோர்ட் அமைத்து குற்றவாளிகளை 1 வருடத்தில் உள்ளே தள்ளுங்கள்


Nada Rajan
ஏப் 30, 2025 16:56

ஊழல் செய்பவர்கள் தண்டனை அறிவித்தே ஆக வேண்டும்


Nada Rajan
ஏப் 30, 2025 16:54

ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்


Jayaraman Ramaswamy
ஏப் 30, 2025 15:52

ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்தவர்களே ஊழல் செய்தால், ????? இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக கையில் எடுத்த ஆயுதம்தான் ஊழல் எதிர்ப்பு. உண்மை நோக்கம், மக்களை ஏமாற்றி பணம் செய்வது மட்டும்தான். மக்கள் இப்பொழுதாவது விழிப்பார்களா??


புதிய வீடியோ