உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது குறித்து 'நான் விவசாயி மகன். பயப்பட மாட்டேன்' என சத்யபால் மாலிக் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். அவரது பதவி காலத்தில் மின் திட்ட ஒப்பந்தத்துக்காக ரூ.300 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் டில்லியில் உள்ள முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சர்வாதிகாரி

இது தொடர்பாக, சத்யபால் மாலிக் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருந்த போதிலும், எனது வீடு சர்வாதிகாரிகளின் விசாரணை அமைப்புகள் மூலம் சோதனையிடப்படுகிறது.

விவசாயின் மகன்

எனது ஓட்டுநர் மற்றும் எனது உதவியாளரையும் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகின்றனர். நான் ஒரு விவசாயி மகன், இந்த சோதனைகளுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Rajagopal
பிப் 22, 2024 19:57

என்னவோ நான் விவசாயி என்று மார்தட்டினால் எல்லாரும் பயந்து விடுவார்கள் என்று ஒரு எண்ணம் இவர்களிடம் நிலவுகிறது. அதே சமயம், இவர்களே, "பாவம், ஏழை விவசாயிகள்" என்றும் மூக்கை சிந்துவார்கள். இவன் விவசாயி என்றால் ஜம்மு காஷ்மீரில் என்ன விவசாயம் செய்துகொண்டிருந்தான்?


Godfather_Senior
பிப் 22, 2024 18:19

ஒ, நீங்கள் காலிஸ்தானி விவசாயின் மகனா ? இப்போ எல்லாம் புரிஞ்சிபோச்சி


Vaithiyalingam
பிப் 22, 2024 17:23

வண்டியேற்றி படுகொலை செய்தர்கள் இன்றுவரை எந்த வழக்கும் இல்லை. சுதந்திரமாக இருக்கிறாங்க.


சூரியா
பிப் 22, 2024 16:01

விவசாயத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? போராட்டம் செய்துவரும் விவசாயிகளை மேலும் தூண்டிவிடுகிறாராம்!


Narayanan
பிப் 22, 2024 15:58

இந்த விவசாயிகள் போராட்டம் இவரின் பங்குடன்தான் நடக்கிறதா ? நான் ஒரு விவசாயி . என்னுடன் விவசாயிகள் இருக்கிறார்கள் என்றால் அதுவும் இப்போது டெல்லியில் போராட்டம் நடக்கும் சமயத்தில் சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்.


GMM
பிப் 22, 2024 14:43

மின் திட்டத்தில் 300 கோடி ஊழல் குற்றச்சாட்டு. விசாரணை அமைப்புகள் முன்னாள் கவர்னர் என்று பாராமல், சோதனை. நல்லது. ஊழல் இல்லை என்று சொல்லாமல் விவசாயி மகன் என்கிறார்? கவர்னர், முதல்வர், அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது விசாரணை அமைப்புகள் நடவடிக்கை அரசியல் கோணத்தில் விமர்சனம் வந்தாலும் துணிந்து நடவடிக்கை. மிக புனிதமான நீதிமன்றம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பல விதங்களில் வடி கட்டி தேர்வு செய்வது, விசாரணை அமைப்புகள் விலகி இருக்க செய்து விடுகின்றன.


Lion Drsekar
பிப் 22, 2024 13:57

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள் அதுபோல் கைதுகள் எல்லாம் கைதும் அல்ல , ரைடு நடக்கும் டமெல்லாம் ரைடும் அல்ல . புரிந்துகொண்டால் எதுவுமே உண்மையும் அல்ல, வந்தே மாதரம்


duruvasar
பிப் 22, 2024 13:28

இவரு பெல்டாகாரன் மாதிரி தெரிகிறது.


Anand
பிப் 22, 2024 13:10

என்னது விவசாயியா? இப்படித்தான் இங்கேயும் ஏகப்பட்ட திருட்டு பயல்கள் தமிழன் என்கிற போர்வையில் ஒழிந்துக்கொண்டு திரியிறானுவ.....


Siddhanatha Boobathi
பிப் 22, 2024 13:08

பிரதமரை ஒன்றிய அரசைக் குறை கூறினால் இப்படித்தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை