உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: சிபிஎஸ்இ திட்டம்

புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: சிபிஎஸ்இ திட்டம்

புதுடில்லி : 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a3u90n03&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அக்குழுவின் பரிந்துரைகளின்படி, கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வை, 9 மற்றும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களை சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வெழுத சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
பிப் 23, 2024 11:16

படித்து படம் நடைதியே ஒன்னும் புரிய வில்லை இதில் புத்தகத்தை வைத்து பரீச்சையாம் விலக்கிடும் இந்த நாடு


DARMHAR/ D.M.Reddy
பிப் 22, 2024 23:49

என் பள்ளிக்கூட நாட்களில் நண்பர் ஒருவருக்கு தமிழ் ஆசிரியர் புத்தகம் கொடுத்து விஞ்சான கேள்விகளுக்கு பதில் எழுத சொன்னார்.நண்பரின் பதில் " கேள்விகளுக்கு விடை எங்கே இருக்கிறது என்று காண்பிக்க கூடாதா ". தமிழ் ஆசிரியர் திரு திரு என்று முழித்தார்.


sankaranarayanan
பிப் 22, 2024 22:51

புத்தகங்களை பார்த்து தேர்வெழுத வேண்டாம் புத்தகத்தில் கேள்விக்குறிய அந்த பகுதியை மட்டும் கத்தரிக்கோலால் வெட்டி வினாத்தாளில் ஓட்டிவிடலாம் எப்படி நமபி யோஜனை இன்னும் எளிதாகிவிடும் பேனா பென்சில் தேவையில்லை புத்தகத்தில் இல்லாத பகுதிகளிலிருந்து கேள்விகேட்கப்பட்டால் அது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறி மாணவர்களுக்கு போனஸ் மார்க் கொடுக்கலாம்


Siva Subramaniam
பிப் 22, 2024 21:52

காப்பி அடிக்கவேணும் என்றாலும், விடை எங்கே இருக்கிறது என்று தெரியவேண்டும்.படித்திருந்தால்தானே தெரியும்.கண்டிப்பாக தமிழ் நாட்டில் இதுவும் முடியாது.


SANKAR
பிப் 22, 2024 19:05

this may not be for final public exam.only for school level exam .such a system exits in US but not at school level .Only at PG level.


Mohan
பிப் 22, 2024 18:31

அய் ஐயோ வேண்டாம் தயவு செஞ்சி இந்த தப்பை பன்னீராதீங்க ஏற்கெனெவே படிக்க மாட்டேங்குறாங்க டிக்ரீ படுச்சவனுக்கே ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது ..வேணும்னா பட்ட படிப்புல வெச்சி பரிசோதனை பண்ணி பாருங்க ....குழந்தைகளோட விளையாடாதீங்க ... சார், மொபைல் வர்றதுக்கு முன்னாடி நெறய வாயாலேயே கணக்கு போட்டாங்க , ஞாபக சக்தி மிகுந்து இருந்துது இன்னிக்கி எல்லாமே மொபைல் ல பாத்தா தான் நினைவுக்கே வருது பொண்டாட்டி பெயர் கூட


vijay
பிப் 22, 2024 18:30

//...முட்டாள்தனமான திட்டம் ...// மனப்பாடம் செஞ்சு அப்படியே ஒப்பிப்பது என்ன மாதிரி திட்டம்?. திறன் ஆய்வு, பகுத்தறிவு (இங்கேயுமா?) சிக்கலான கேள்விகள் கொடுத்து பதில் கேப்பாங்க. புத்தகம் கொடுத்து எழுத சொன்னாலும், பக்கங்களை புரட்டி பதில் தேட நேரம் ஆகும். திறன் ஆய்வு, பகுத்தறிவு என்பது என்னவென்று படியுங்க.


SIVA
பிப் 22, 2024 21:06

மனப்பாடம் செய்து படிப்பது திராவிட மாடல் சமசீர் கல்வி புரிந்து படிப்பது சி பி ஸ் ஈ கல்வி , அதில் ஏன் புக் பார்த்து எழுத வேண்டும் .....


Seshan Thirumaliruncholai
பிப் 22, 2024 17:26

ஞாபக சக்தி இறைவன் கொடுத்த வரமா அல்லது பயிற்சியா என்பது அறிவியல் பூர்வமாக விடை காணவேண்டும். பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகள் பல அதிசயங்கள் செய்கின்றனர். பூர்வ ஜென்ம நினைவுகள் என்றும் கூறுவா. அப்படி என்றால் எல்லா பிறப்பிற்கும் ஏற்படவேண்டும். படிக்கும் பொருளை அறிந்து படித்தால் மனப்பாடம் தேவையில்லை. புத்தகத்தை பார்த்து எழுதுதல் நல்ல முயற்சி.


SIVA
பிப் 22, 2024 17:06

முட்டாள்தனமான திட்டம் .....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி