உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மக்கள் கொண்டாட்டம்

அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மக்கள் கொண்டாட்டம்

அயோத்தி,: உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் பல நுாற்றாண்டு கால கனவு இன்று நிறைவேறியது. பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் ராம சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்து பிராண பிரதிஷ்டை செய்தார். பிராண என்றால் உயிர் கொடுத்தல், மூச்சு வழங்கல் என அர்த்தம் கொள்ளலாம்.கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது.பகல் 12:30 மணி முதல் 12 40 மணி வரை பிராண பிரதிஷ்டை நடந்தது.ஐந்து நுாற்றாண்டு இடைவெளிக்கு பின்னர் ராமர் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை பிரகடனம் செய்யும் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாட, நாட்டு மக்கள் அனைவரும் இன்று மாலை வீடுகளுக்கு முன் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.Galleryநீண்டகாலமாக இரு பிரிவினர் இடையே நிலவிய மோதலும் கசப்பும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முடிவுக்கு வந்து, அதே சூட்டுடன் கோவில் கட்டுமான பணியும் துவங்கியதால் நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.பணி முடிந்து கோவில் திறக்கப்படுவதால் மக்களிடம் உற்சாகம் பொங்குகிறது. எங்கு பார்த்தாலும், ராமர் குறித்தும், அயோத்தி கோவில் குறித்தும் பேசப்படுகிறது.பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் , உபி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பட்டர்கள் சிலர் மட்டும் இருந்தனர். விழாவில் பங்கேற்க ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இன்று மட்டும் அழைப்பாளர்கள் தவிர எவரும் கோவிலை நெருங்க முடியாது. நாளை முதல் பொதுமக்கள் போகலாம்.மத வேறுபாடு பாராமல் அயோத்தியில் உள்ள அனைவரும் குதுாகலமாக வீடு, கடைகள் வீதிகளை அலங்கரிக்கின்றனர். சர்வதேச தரத்திலான விமான நிலையம், நவீன வசதிகள்கொண்ட ரயில்வே ஸ்டேஷன், மிக அகலமான சாலைகள் என ராமரின் நகரம் ஒட்டுமொத்தமாக பதுப்பிக்கப்பட்டுள்ளது.எங்கு பார்த்தாலும், வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் மற்றும் கோவிலின் பதாகைகள், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுதும் காவி கொடிகள் கட்டப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகளில் ராம சங்கீர்த்தனங்கள், ராம நாமங்கள் ஒலிக்கின்றன. மிகுந்த மகிழ்ச்சியுடனும், உணர்வு பெருக்குடனும் குவிந்துள்ள மக்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுகின்றனர்.

தினமலரில் நேரடி ஒளிபரப்பு

உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் அயோத்தி கும்பாபிஷேகத்தை இன்னொரு தீபாவளியாக கொண்டாட தயாராகி விட்டனர். அவர்களுக்காக சர்வதேச சேனல்களிலும் இணையவழியிலும் விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது. தூர்தர்ஷன் எல்லா மொழிகளிலும் நேரடி வர்னனையுடன் ஒளிபரப்புகிறது. தினமலர் இணையதளத்திலும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எது சனாதன தர்மம்?

சனாதன தர்மம் குறித்த புரிதல் இல்லாதவர்களே அதை எதிர்க்கின்றனர். சனாதனம் என்பது மதமோ, வழிபாட்டு முறையோ அல்ல. அது வாழ்வின் நடைமுறை.அறிவியலை நீங்கள் நம்பாவிட்டாலும், அறிவியல்கோட்பாடுகள் உள்ளன. அதுபோலவே, சனாதன தர்மக் கொள்கைகளும் நித்தியமானவை.-கோவிந்த் தேவ் கிரிபொருளாளர், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை

2 விக்ரஹங்களும் இடம் பெறும்!

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது:கோவில் கர்ப்ப கிரகத்தில, 51 அங்குல உயரமுடைய, பால ராமர் விக்ரகம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கு பிராண பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தற்காலிக கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆறு அங்குல குழந்தை ராமர் விக்ரஹம், புதிய விக்ரகத்தின் முன்னால் பிரதிஷ்டை செய்யப்படும். கோவில் கட்ட இதுவரை 1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இன்னும் 300 கோடி தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

50 இசைக்கருவிகளுடன் பிரமாண்ட கச்சேரி

@கும்பாபிஷேகத்தை ஒட்டி அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில் இரண்டு மணி நேர பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு சங்கீத் நாடக அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் வாயிலாக கச்சேரி நடத்தப்பட்டது. உத்தர பிரதேசத்தில் இருந்த பக்காவாஜ், புல்லாங்குழல், டோலக் ஆகியவையும், கர்நாடகாவில் இருந்து வீணையும், பஞ்சாபில் இருந்து அல்கோஜாவும், மஹாராஷ்டிராவில் இருந்து சுந்தரியும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளன.ஒடிசாவில் இருந்து மர்தாலா, மத்திய பிரதேசத்தில் இருந்து சந்துார், மணிப்பூரில் இருந்து புங், அசாமில் இருந்து நகடா மற்றும் களி, சத்தீஸ்கரில் இருந்து தம்புரா என பல இசைக் கருவிகள் இந்த நிகழ்ச்சியில் அங்கம் வகிக்கின்றன.புதுடில்லியின் ஷெனாய், ராஜஸ்தானின் ராவணஹதா, மேற்கு வங்கத்தின் ஸ்ரீகோல் மற்றும் சரோட், ஆந்திராவின் கடம், ஜார்க்கண்டின் சிதார், குஜராத்தின் சந்தார், பீஹாரின் பகாவாஜ், உத்தராகண்டின் ஹூட்கா, தமிழகத்தின் தவில், மிருதங்கம், நாதஸ்வரம் ஆகியவை வாயிலாக பிரமாண்ட இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து ஸ்ரீ ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஸ்ரீ ராமரின் கும்பாபிஷேக விழாவில் நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி, கொண்டாட்டத்துக்கு மகுடம் சேர்ப்பதுடன், இன்றைய வரலாற்று சம்பவத்தில் ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கிறது' என தெரிவித்தார்.

பக்தர்களை பரவசப்படுத்தும் பக்தி பாடல்!

அயோத்தி கோவிலுக்கு ராமர் திரும்பி வந்ததை கொண்டாடும் வகையில் 'ராம்ஜென்ம பூமி: திரும்பி வரும் அற்புத சூரியன்' என்ற பெயரில் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமிஷ் திரிபாதி என்பவரது கைவண்ணத்தில் உருவாகும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெறும் தலைப்பு பாடல், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. பிரபல பின்னணி பாடகர்கள் சோனு நிகம், மாலினி அவஸ்தி குரலில், பக்தி பிரவாகமாக வெளியாகியுள்ள இந்த பாடலை, புகழ்பெற்ற கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். 'ராமரின் இதயத்தில்' எனத் துவங்கும் இந்த பாடலில் அயோத்தியின் சிறப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த இந்த பாடல், அயோத்தி நகர் முழுதும் எதிரொலிக்கிறது. 'வரலாற்று நிகழ்வை குறிக்கும் இந்த பாடலை பாடியது மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது' என பாடகர்கள் சோனு நிகம் மற்றும் மாலினி அவஸ்தி ஆகியோர் கூறியுள்ளனர்.

அயோத்தி நகரம் முழுதும்பல அடுக்கு பாதுகாப்பு

கும்பாபிேஷக விழாவை ஒட்டி அயோத்தி நகரம் முழுதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தர பிரதேச சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறியதாவது: அயோத்தி முழுதும் மத்திய படையினர், 13,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரிசர்வ் போலீஸ் படையினரும் இடம் பெற்றுஉள்ளனர். அயோத்தி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், ராமர் கோவில் அருகில் உள்ள சரயு ஆறு என அனைத்து இடங்களிலும் இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவை தவிர, அயோத்தி நகரை 24 மணி நேரமும் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி உடைய 10,000 கண்காணிப்பு கேமராக்கள் நகர் முழுதும் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருவறையை அலங்கரிக்கும் சென்னை மலர்கள்

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் அலங்காரம் செய்யப்பட்ட மலர்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவிலின் மலர்கள் அலங்கார குழு தலைவர் சஞ்சய் தவாலிகார் கூறுகையில், ''ராமர் கோவில் முழுவதையும் 3,000 கிலோ எடையிலான, 20க்கும் மேற்பட்ட மலர் வகைகளால் அலங்கரித்துஉள்ளோம்.''இதற்காக, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலர்களை வரவழைத்து உள்ளோம். சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிக நறுமணம் வீசக்கூடிய மலர்களை கொண்டு, கோவில் கருவறையை அலங்கரித்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Amruta Putran
ஜன 22, 2024 23:26

Janani Janmabhumishcha Swargadapi Gariyasi ??????????? ?????? ?????????? ????? ???????? ??? ?????????? Mother and Motherland are Superior than Heaven - Lord Sri Rama


g.s,rajan
ஜன 22, 2024 21:59

அந்த ராமர்தான் இந்தியாவை இந்திய மக்களைக் காப்பாற்றணும் ....


Ranganathan
ஜன 22, 2024 20:40

மோடிஜியை பிரதமராக பெற்றது நமது அதிருஷ்டம். ஸ்டாலினை சிஎப் மினிஸ்டர் ஆக பெற்றது நமது துரதிருஷ்டம்.


கல்யாணராமன் மறைமலை நகர்
ஜன 22, 2024 18:39

சொல்ல வார்த்தைகளில்லை. இழந்த பாரதத்தின் பெருமை மீட்கப்பட்டது. இனியும் இது தொடரவேண்டும். மீண்டும் வேண்டும் மோடிஜி. போலி மதச்சார்பின்மை பேசும் கயவர்களை களையெடுக்க ஸ்ரீராமர் மோடி வடிவில் வந்துவிட்டார். ஜெய்ஸ்ரீராம்


DUBAI- Kovai Kalyana Raman
ஜன 22, 2024 17:22

ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஹனுமான் ஜி , ஜெய் மோடி ஜி


tvk1509
ஜன 22, 2024 17:16

ஜெய் ஸ்ரீ RAM


Kanda kumar
ஜன 22, 2024 16:24

சார் டைட்டில் சூப்பர். தினமலருக்கு கோடானுகோடி ராம பக்தர்கள் சார்பாக நமஸ்காரங்கள்.....


Godyes
ஜன 22, 2024 16:18

இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை விட அவர்களை நல்வழிபடுத்த இது போன்ற நல்ல காரியங்கள் செய்து அவர்களிடமுள்ள அறியாமையை அகற்றுவது எவ்வளவோ மேல்.


Lakshminarasimhan Muthuswamy
ஜன 22, 2024 15:29

Om Jai Shri Ram Jai


Lakshminarasimhan Muthuswamy
ஜன 22, 2024 15:28

Jai Shri Ram


மேலும் செய்திகள்





புதிய வீடியோ