உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் மார்ச் 1, 2027 அன்று தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாவது:, இந்த பணி மார்ச் 1, 2027 முதல் நாடு தழுவிய அளவில் தொடங்கும். நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகண்டில், இந்த செயல்முறை அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 04, 2025 23:01

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது இனி சாதிகள் இரட்டிப்பு ஆகிவிடும். இந்துக்களிலும் பல்வேறு ஜாதிகள் உள்ளன. அதே பெயர்களில் கிறிஸ்துவத்திலும் ஜாதிகள் வரும். முஸ்லிம் மதத்திலும் வரலாம். ஆக ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு நாம் ஜாதிகள் வளர்த்து கொண்டு உள்ளோம்.


Sundar R
ஜூன் 04, 2025 19:49

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் போது, குடும்பத்தலைவர்/குடும்பத்தலைவி ஆகியோரிடம் அவர்கள் சொந்தமாக வீடு எத்தனை வீடுகள், கார்கள், இதர சொத்துக்களின் மதிப்பு, எத்தனையாவது தலைமுறையாக இவர் இட ஒதுக்கீடு மூலம் பலனடைந்திருக்கிறார்? போன்ற விபரங்களையும் கேட்டு பதிவு செய்ய வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடு முறை மூலம் கோடீஸ்வரர்கள் ஏராளமான ஏழைகளை எளிதில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இட ஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், முதல் முறையாக இட ஒதுக்கீடு மூலம் முயற்சி செய்கிறவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏராளமான ஏழை மக்களை ஏமாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. ஏராளமான ஏழை ஜனங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பின்பு தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையையே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடித்தட்டில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அம்பேத்கர் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாது போகும். அம்பேத்கர் அவர்கள் தற்போது உயிருடன் இருந்து மேற்கூறிய தவறுகள் இருப்பதைக் கண்டால், இட ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு கடுங்கண்டனம் தெரிவிப்பார். தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை அம்பேத்கர் அவர்களே கண்டிக்கும் வகையில் படுமோசமாக அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த ஏழை மக்களை ஏமாற்றுகிறது.


ஆரூர் ரங்
ஜூன் 04, 2025 18:48

அரசியல் அதிகமாகிவிட்டதால் இனிமேல் எவ்வித சென்ஸசும் சாத்தியமில்லை. பொய் வாக்குறுதி கொடுத்து ஊரை ஏமாற்றலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை