மேலும் செய்திகள்
நாட்டின் சுயாட்சியை அடகு வைக்க முடியாது; காங்., எம்பி சசி தரூர்
1 hour(s) ago | 1
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
2 hour(s) ago | 1
பார்லி.,யில் நேற்று...
6 hour(s) ago
புதுடில்லி: சஞ்சார் சாத்தி செயலியின் மூலம் பயனாளர்களின் தகவல்களை உளவு பார்ப்பது சாத்தியமில்லை என்று மத்திய தகவல் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வண்ணம், அனைத்து வகை புதிய ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், மொபைல்போன் பயனாளர்களை உளவு பார்க்கவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தன. இப்படியிருக்கையில், சஞ்சார் சாத்தி செயலியை விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மோசடிகளை தடுக்க இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சஞ்சார் சாத்தி செயலி குறித்து லோக் சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,' சஞ்சார் சாத்தி செயலி மூலம் உளவு பார்ப்பது சாத்தியமில்லை. ஆன்லைன் முறைகேடுகளில் இருந்து மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,' எனக் கூறினார்.
1 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
6 hour(s) ago