மேலும் செய்திகள்
'டாப் - 10' நாடுகளுக்கான ஏற்றுமதி 4.20% உயர்வு
28-Aug-2024
புதுடில்லி; வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து உத்தரவிட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்பதும் அவர்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.இந் நிலையில், வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு ரூ. 46 ஆயிரம் என்று இருந்ததை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாய விளைபொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் அதிக வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் முக்கிய மண்டலமான மகாராஷ்டிராவில் விரைவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பு என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
28-Aug-2024