உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமராவதியை மீண்டும் தலைநகரமாக்கும் பணியை துவங்கிய சந்திரபாபு நாயுடு

அமராவதியை மீண்டும் தலைநகரமாக்கும் பணியை துவங்கிய சந்திரபாபு நாயுடு

அமராவதி: ஆந்திராவின் தலைநகராக அமராவதியை மீண்டும் நிறுவுவதற்கான பணிகளை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துவங்கினார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலத்தில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக 34,390 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.அந்த நிலங்களில், குடியிருப்பு கட்டடங்கள், வணிக ரீதியிலான பிளாட்டுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.அடுத்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்., அரசு, ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்ததுடன், அமராவதி தொடர்பான திட்டங்களை முடக்கியது. இந்நிலையில், மீண்டும் முதல்வராகியுள்ள சந்திரபாபு நாயுடு, தலைநகராக அமராவதியை அறிவிப்பது தொடர்பான பணிகளை துவக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள் இடைவேளைக்குப் பின் ராயபுடி கிராமத்தில் இதற்கான பணிகள் நேற்று துவங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 20, 2024 13:01

மக்களின் வரிப்பணம் கோடிகளில் மீண்டும் விரயம். இந்த நாயுடு சரியில்லை. ஜெகனும் சரியில்லை. மக்கள் ஒரு நல்ல, நேர்மையான தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் எங்கே செல்வார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை