உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

நிலவில் 160 கி.மீ., பள்ளம்; கண்டுபிடித்தது பிரக்ஞான் ரோவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலவில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை, சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் - 3 விண்கலத்தின், 'விக்ரம் லேண்டர்' கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது.மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் 'ரிமோட் கார்' போல அங்கும், இங்கும் வலம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இதன் வாயிலாக, சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, நிலவில் தடம் பதித்த நான்காவது நாடானது இந்தியா. ரோவர் மூலம் பெறப்பட்ட படங்கள், தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த தகவலை ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Arachi
செப் 23, 2024 16:15

இந்தியா அறிவியலிலும சரி விண்வெளி ஆராய்ச்சியிலும் சரி மிகப் பெரிய பணக்கார நாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிலாவில் பல சாதனைகளை சாதிப்பது பாராட்டுக்குறியதே. வாழ்த்துக்கள்


Ramalingam Shanmugam
செப் 23, 2024 12:03

செல் தட்டி என்ன சொல்லுது


Gopalan
செப் 23, 2024 11:31

நமக்கும் முன்னேறிய நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். அவர்கள் வெளியே சொல்லும்படியான பெரிய, புதிய கண்டு பிடிப்புகளை , புதிய கிரகம், நட்சத்திரம்,, போன்றவற்றை மட்டுமே சொல்வார்கள். நாம் FB ஸ்டேட்டஸ் போல் பள்ளம், மேடு,, பாறை என்று சொல்லிக் கொண்டே போவோம். இது சாதனையைக் குறை கூறுவது அல்ல. மிகைப் படுத்தாலும் சரியல்ல.


Venkatesan Ramasamay
செப் 23, 2024 10:06

விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அவ்வப்போது தினமலர் பத்திரிகைமூலம் தெரிந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது


babu
செப் 23, 2024 12:01

ராம்ஸ் இதை தெரிஞ்சு இப்போ என்ன புண்ணியம். உங்க ஊர்ல உள்ள ஏதாவது ஒரு சமூக பிரச்சினையை முடிக்க படிக்காத்வர்களுககு அதை எடுத்து சொல்லி புரிய வையுங்கள். நீங்கள் மகான் ஆவீர்கள். நன்றி


Kalyanaraman
செப் 23, 2024 09:16

நமது விஞ்ஞானிகளுக்கும் சரியாக ஊக்குவிக்கும் மத்திய அரசுக்கும் பாராட்டுக்கள். எந்த நாடும் உதவாத நிலையில், நம் நாட்டு தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் இதுவரை செய்த அனைத்துமே சாதனைகள் தான். அதெற்கெல்லாம் மகுடமாக சந்திராயன் 3 விளங்குகிறது .


RAMAKRISHNAN NATESAN
செப் 23, 2024 08:53

இது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தி உள்ளது. ஆண் விஞ்ஞானிகளையா ????


karupanasamy
செப் 23, 2024 11:08

முரசொலி வாசகன் தான நீயி


ديفيد رافائيل
செப் 23, 2024 08:51

தினமலர் இத பற்றிய news அடிக்கடி போடுங்க please ?


முக்கிய வீடியோ